திருச்செங்கோட்டில் புதிய தேர் வெள்ளோட்டம்
25 Jan 2026, 6:29 pm
<p><strong>திருச்செங்கோட்டில் புதிய தேர் வெள்ளோட்டம்</strong></p>
<p>நாமக்கல், ஜன.25- திருச்செங்கோட்டில் அர்த்தநாரீஸ்வரருக்கு, ரூ.3 கோடி செலவில் அமைக்கப்பட்ட புதிய தேர் வெள் ளோட்டம் ஞாயிறன்று நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரர் கோவில் தேர் சுமார் 450 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. தமிழகத்தின் நான்காவது பெரிய தேராக விளங்கிய இத்தேர் பழமை அடைந்த தால், புதிதாக தேர் அமைக்க முடிவு செய்யப்பட்டு, சுமார் ரூ.3 கோடி மதிப்பீட்டில், 23 அடி உயரம், 23 அடி அகலம்கொண்ட இரும்பு அச்சு உடன் கூடிய புதிய தேர் உருவாக்கும் பணி தற்போது முடிவடைந்து. கடந்த ஓராண்டாக இந்த தேர் வடிவமைக்கப்பட்டு வந்த நிலையில், தேரின் வடிவமைப்பு நிறைவடைந்து ஞாயிறன்று வெள்ளோட்டம் விடப்பட்டது. திருச் செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் உறுப்பினர் ஈஸ்வ ரன், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கே.எஸ்.மூர்த்தி, நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு உள்ளிட்ட பலர் தேரின் வடத்தை பிடித்து இழுத்து வெள்ளோட்டத்தை தொடங்கி வைத்தனர். தேர் நிலையில் இருந்து தொடங்கி கிழக்கு ரத வீதி, மேற்கு ரத வீதி, தெற்கு ரத வீதி, வடக்கு ரத வீதி வழியாக மீண்டும் தேர் நிலையை அடைந்தது. இந்த வெள்ளோட்ட நிகழ்ச்சி யில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். மயிலாட்டம், கரகாட்டம், தப்பாட்டம், உள்ளிட்ட பல்வேறு கிராமிய நிகழ்ச்சிக ளுடன் தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.</p>
