முந்தய பக்கம்

மதுராந்தகம் புதிய பேருந்து நிலையம் இம்மாத இறுதிக்குள் திறக்க வாய்ப்பு

19 Feb 2026, 3:09 pm
மதுராந்தகம் புதிய பேருந்து நிலையம்  இம்மாத இறுதிக்குள் திறக்க வாய்ப்பு
<p><strong>மதுராந்தகம் புதிய பேருந்து நிலையம் &nbsp;இம்மாத இறுதிக்குள் திறக்க வாய்ப்பு</strong></p> <p>மதுராந்தகம், பிப். 19- &nbsp;செங்கல்பட்டு மாவட்டம் மது ராந்தகத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.3.73 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன. இதில் 51 கடை கள் மற்றும் 50 பேருந்துகள் நிறுத்தும் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ரூ.99 லட்சம் கூடுதல் நிதியில் நகராட்சி உணவகம் மற்றும் வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வரு கின்றன. தற்போது தற்காலிகப் பேருந்து நிலை யம் நகருக்கு வெளியே உள்ளதால், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் 2 கி.மீ. நடந்து செல்ல வேண்டிய சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இது குறித்து நகராட்சி ஆணையர் அபர்ணா கூறுகையில், கட்டுமானப் பணிகள் முடியும் தருவாயில் உள்ளதால், இம்மாத இறுதிக்குள் புதிய பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்படும் எனத் தெரிவித்தார். இதேபோல், செங்கல்பட்டு மாவட்டத் தலைநகரில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலை யமும் விரைவில் திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.</p>
Share
FacebookXWhatsAppTelegram