தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

உடையாம்பாளையம் மாநகராட்சிப் பள்ளியில் ரூ.1.46 கோடியில் புதிய கட்டடம்

14 Feb 2026, 4:33 pm
உடையாம்பாளையம் மாநகராட்சிப் பள்ளியில் ரூ.1.46 கோடியில் புதிய கட்டடம்
<p><strong>உடையாம்பாளையம் மாநகராட்சிப் பள்ளியில் ரூ.1.46 கோடியில் புதிய கட்டடம்</strong></p> <p>கோவை, பிப்.14&ndash; கோவை மாநகராட்சி உடையாம் பாளையம் நடுநிலைப்பள்ளியில், ரூ.1.46 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட் டுள்ள புதிய வகுப்பறை கட்டடங் களை கோவை நாடாளுமன்ற உறுப் பினர் கணபதி ப.ராஜ்குமார் சனி யன்று திறந்து வைத்தார். கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட 12-வது வார்டு, &nbsp;உடையாம்பாளையம் பகுதியில் இப் பள்ளி அமைந்துள்ளது. மாநில நிதிக் குழு பள்ளி வளர்ச்சித் திட்டம் மற்றும் மாநகராட்சி பொது நிதி ஆகியவற் றின் கீழ், சுமார் ரூ.1.46 கோடி மதிப் பீட்டில் 8 புதிய வகுப்பறைகள் கட்டப் பட்டன. இந்தப் புதிய கட்டடத்தின் திறப்பு விழா சனியன்று நடைபெற் றது. இவ்விழாவில் கட்டடத்தைத் திறந்து வைத்து பேசிய நாடாளு மன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் கூறுகையில், &ldquo;தமிழகத்திற்கு &lsquo;சமக்ர சிக்ஷா அபியான்&rsquo; திட்டத்தின்கீழ் வர வேண்டிய சுமார் 4,000 கோடி ரூபாய் நிதியை வழங்காமல் ஒன்றிய அரசு முடக்கி வைத்துள்ளது. இந்தியைத் திணிக்கும் நிபந்தனையை ஏற்றால் மட்டுமே இந்த நிதியை விடுவிக்க முடியும் என்று ஒன்றிய அரசு நிர் பந்திக்கிறது. இத்தகைய நிலைப் பாட்டை திமுக அரசு ஒருபோதும் ஏற் காது. தமிழக அரசின் சிறப்பான செயல்பாடுகளால் தற்போது 59 சத வீத மாணவர்கள் உயர்கல்விக்குச் செல்வதாகவும், இந்தியாவின் மொத்த உழைக்கும் பெண்களில் 45 &nbsp;சதவீதம் பேர் தமிழகத்தைச் சேர்ந்த வர்கள் என்பதும் பெருமைக்குரியது, என்றார். முன்னதாக நடைபெற்ற இந்த &nbsp;நிகழ்வில், கோவை மாநகராட்சி மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்தி ரன், மாநகராட்சி ஆணையாளர் மா. சிவகுரு பிரபாகரன், துணை மேயர் ரா.வெற்றிசெல்வன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். இதில், வடக்கு மண்டலத் தலைவர் வே.கதிர்வேல், 12 ஆவது வார்டு மாமன்ற உறுப்பி னரும், மார்க்சிஸ்ட் கட்சியின் மாமன் றக்குழு தலைவருமான வி.இராம மூர்த்தி மற்றும் மாநகராட்சி அதிகாரி கள், பள்ளி ஆசிரியர்கள், பொதுமக் கள் என பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.