முந்தய பக்கம்

மாற்றுத்திறனாளிகள் சங்க புதிய கிளை துவக்கம்

2 hours before
மாற்றுத்திறனாளிகள் சங்க புதிய கிளை துவக்கம்

மாற்றுத்திறனாளிகள் சங்க புதிய கிளை துவக்கம்

திருப்பூர், அக். 5– திருப்பூர் மாநகராட்சி இந்திரா நகர் பகுதியில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் புதிய கிளை ஞாயிறன்று துவங்கப்பட்டது.

இப்புதிய கிளையை சங்கத்தின் திருப்பூர் மாவட்டத் தலைவர் லோகநாதன் மற்றும் மாவட்டச் செயலாளர் பழனிச்சாமி ஆகியோர் முறைப்படி தொடங்கி வைத்தனர். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள், சலுகைகள், உபகரணங்கள் பெறுவது குறித்தும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் சங்கத்தை வழிநடத்துவது பற்றியும் விரிவாக எடுத்துரைத்தனர்.

நிகழ்வின் நிறைவில், புதிய கிளையின் நிர்வாகிகளாக தலைவராக பெருமாள்சாமி, செயலாளராக புவனேஸ்வரி,துணைத் தலைவராக குப்புசாமி மற்றும் துணைச் செயலாளராக மனோகரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram