முந்தய பக்கம்

மகாராஷ்டிராவில் புதிய மதமாற்றத் தடைச் சட்ட மசோதா தாக்கல்

14 Mar 2026, 2:57 pm
மகாராஷ்டிராவில்  புதிய மதமாற்றத்  தடைச் சட்ட மசோதா தாக்கல்
<p><strong>மகாராஷ்டிராவில் &nbsp;புதிய மதமாற்றத் &nbsp;தடைச் சட்ட மசோதா தாக்கல்</strong></p> <p>பாஜக கூட்டணி ஆளும் மகா ராஷ்டிர மாநில சட்டமன்றத் தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. &nbsp;இந்தக் கூட்டத்தொடரில் சர்ச்சைக் குரிய &lsquo;தர்ம சுதந்திர மசோதா 2026&rsquo; மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. &nbsp;மசோதாவில், சட்டவிரோத அல்லது கட்டாய மதமாற்றத் திருமணங்கள் மூலம் பிறக்கும் குழந்தைகள், சட்டப்படி அவர்க ளது தாய் திருமணத்திற்கு முன்பு பின் பற்றிய மதத்தைப் பின்பற்றுப வர்களாகவே கருதப்படுவார்கள். மதம் மாற விரும்பும் தனிநபர்கள், தாங்கள் மதம் மாறுவதற்கு 60 நாட்களுக்கு முன்னதாக மாவட்ட ஆட்சியரிடம் முறைப்படி அறிவிப்பு சமர்ப்பிக்க வேண்டும். &nbsp;நடைமுறைகளை மீறுவோருக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப் படலாம். மீண்டும் அதே குற்றத்தைச் செய்பவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை கடும் சிறைத்தண்டனை மற்றும் ரூ.7 &nbsp;லட்சம் அபராதம் விதிக்க மசோதா வழி வகை செய்கிறது. &nbsp;இந்த முன்மொழியப்பட்ட சட்டம் தனிநபர் சுதந்திரத்தைப் பாதிப்பதோடு, அரசியலமைப்பு வழங்கும் மதத்தைப் பின்பற்றும் மற்றும் பரப்பும் உரிமை யைப் பறிக்கும் என நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram