ரூ.20 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையம் திறப்பு
8 Jun 2026, 9:41 pm

ரூ.20 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையம் திறப்பு

திருவில்லிபுத்தூர், ஜூன் 8- திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அத்திகுளம்–செங் குளம் ஊராட்சியின் செங் குளம் கிராமத்தில் ரூ.20 லட் சம் மதிப்பில் புதிதாக கட் டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டிடத்தின் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவில் சமூக நலத் துறை அமைச்சர் ஜெகதீஸ் வரி கலந்து கொண்டு புதிய அங்கன்வாடி மையக் கட்டி டத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து மையத்தில் உள்ள குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். மேலும், அங்கன்வாடி மையத்தின் செயல்பாடுகள், குழந்தைகளுக்கான சேவை கள் மற்றும் அடிப்படை வசதி கள் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்து ஆய்வு மேற் கொண்டார். இந்நிகழ்ச்சியில் கார்த்திக், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் மாவட்ட அலு வலர் (பொறுப்பு) பங்கஜம், கண்காணிப்பாளர்கள், மேற் பார்வையாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லலிதா மற்றும் சிவகுமார், ஊராட்சி செயலர் விஜய குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். புதிய அங்கன்வாடி மையம் பயன்பாட்டிற்கு வந் துள்ளதால், செங்குளம் கிராம குழந்தைகளுக்கு பாதுகாப்பான மற்றும் மேம் பட்ட முன்பள்ளி வசதிகள் கிடைக்கும் என பொதுமக் கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.