தீக்கதிர் முக்கிய செய்திகள்
20 Nov 2025, 3:46 pm

அரசுக் கல்லூரிகளுக்கு புதிய கூடுதல் கட்டடங்கள்

சென்னை, நவ. 20 - உயர்கல்வித் துறை சார்பில் கடலூர், விழுப்புரம், திருப்பத்தூர், அரியலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ரூ. 59.93 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடங்களை காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், 190 உதவிப் பேராசிரியர்கள் உள்ளிட்டோருக்கு பணி நியமன ஆணைகளையும் முதலமைச்சர் வழங்கினார். திறன்மிகு மையங்களாக மேம்படும் 44 அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளி மேல்முறையீடு

சென்னை, நவ. 20 - பொள்ளாச்சி கும்பல் பாலியல் வழக்கில் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து, குற்றவாளி திருநாவுக்கரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு அளித்துள்ளார்.இந்த வழக்கில் திருநாவுக்கரசு, சபரி ராஜன், சதீஷ் உள்ளிட்ட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். கோவை நீதிமன்றம் கடந்த மே 13 அன்று ஒன்பது பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. தீர்ப்பு வெளியான 60 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்ய வேண்டிய நிலையில், தாமதமாக மனு தாக்கல் செய்வது குறித்து உயர்நீதிமன்றத்தில் தனி மனு அளித்துள்ளார் திருநாவுக்கரசு.

தவெக பிரச்சாரத்துக்கு சேலத்தில் அனுமதி மறுப்பு

சேலம், நவ. 20 - சேலத்தில் டிசம்பர் 4 அன்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நடத்த இருந்த பிரசாரப் பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. தவெக நிர்வாகிகள் சேலம் காவல் ஆணையரிடம் அனுமதி கோரி மனு அளித்திருந்த நிலையில், அது நிராகரிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 3 ஆம் தேதி கார்த்திகை தீப விழா கொண்டாடப்படுவதால், டிசம்பர் 4 அன்று பிரச்சாரக் கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்க முடியாது என்று காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் என்பதால், அதற்கான முன்னெச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகளிலும் காவல்துறையினர் ஈடுபட வேண்டியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை: டாடா டெக் னாலஜிஸ் லிமிடெட் நிறு வனத்துடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னி லையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் வியாழக்கிழமை கையெழுத்தானது.

எஸ்ஐஆர் பணிக்கு கூடுதல் அதிகாரிகள்

சென்னை: தேர்தல் ஆணையம் உத்தரவின் படி 25 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு கூடுத லாக உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகள் நிய மனம் செய்யப்பட்டுள்ள னர். வட்டாட்சியர், சிறப்பு வட்டாட்சியர், வட்டார வளர் ச்சி அலுவலர் நிலையில் உள்ள அதிகாரிகள் இந்த பதவிகளுக்கு நியமிக்கப் பட்டுள்ளனர்.

இன்று கனமழை எச்சரிக்கை

சென்னை: தமிழ் நாட்டில் வெள்ளிக்கிழமை (நவ. 21) அன்று கடலூர், மயிலாடுதுறை, திருவா ரூர், நாகப்பட்டினம், விரு துநகர், இராமநாதபுரம், தென்காசி, திருநெல் வேலி, தூத்துக்குடி, கன்னி யாகுமரி ஆகிய 10 மாவட்டங்களுக்கு கன மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது.