புதிய ரேசன் கடை திறப்பு
20 Feb 2026, 2:39 pm
<p><strong>புதிய ரேசன் கடை திறப்பு</strong></p>
<p>பாபநாசம், பிப்.20- தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அலீம் சதுக்கம் பகுதியில், இடநெருக்கடியில் இயங்கி வந்த ரேசன் கடை எண்.4-க்கு மாற்று இடத்தில் புதிய கடை கட்டித்தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ரூ.14 லட்சத்தில் புதிதாக ரேசன் கடை கட்ட பாபநாசம் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கினார். இதில் புதிதாக கட்டப்பட்ட ரேசன் கடையை பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, பயனாளிகளுக்கு ரேசன் பொருளை வழங்கினார். இதில் அய்யம்பேட்டை பேரூராட்சி தலைவர் புனிதவதி, செயல் அலுவலர் பழனிவேல், துணைத் தலைவர் அழகேசன், பேரூராட்சி கவுன்சிலர்கள், அய்யம்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் சங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.</p>
