தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

16 Nov 2025, 3:30 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

‘பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை’: தவெக திட்டவட்டம்

சென்னை: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஒரு போதும் தவெக இணையாது என்று கட்சியின் இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தவெக இணையுமா என்ற கேள்விக்கு பதிலளித்த நிர்மல் குமார், எங்களின் கூட்டணி நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம். அதில் எந்த  மாற்றமும் இல்லை என்றார். எங்களின் கொள்கை எதிரியாக  பாஜகவைக் குறிப்பிட்டோம். அந்தக் கட்சியோடு கூட்டணி வைத்திருக்கிற எந்தக் கட்சியோடும் கூட்டணி வைக்க ஒரு சதவீதம்கூட வாய்ப்பில்லை என்று அவர் தெரிவித்தார். எங்கள் நிலைப்பாட்டில், எங்கள் தலைவர் விஜய்தான்  முதலமைச்சர் வேட்பாளர். எங்கள் கட்சியின் தலைமையை  ஏற்று யார் வருகிறார்களோ, அவர்களுடன் எங்களுக்கு கொள்கை முரண்கள் இல்லையென்றால், கூட்டணி வைப்போம்.  இதில் எந்த மாற்றமும் இல்லை என்று நிர்மல் குமார் தெரி வித்தார்.

‘பீகார் தேர்தலில்  ஜனநாயகம் தோற்றுள்ளது!’

சிவகங்கை: சிவகங்கையில் நடைபெற்ற இளைஞர் காங்கிரஸ் நிகழ்ச்சியில் ஞாயிறன்று பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பீகார் தேர்தலில் காங்கிரஸ் தோற்க வில்லை; ஜனநாயகமே தோற்றுள்ளது. தமிழக மக்கள் ஜிஎஸ்டியாக வழங்கிய ரூ.1 லட்சத்து 21 ஆயிரம் கோடியை பீகா ருக்கு கொடுத்து பாஜக வெற்றிபெற்றது. பீகாரில் கடந்த 5 ஆண்டு களாக வேலைவாய்ப்பு அளிக்காத பாஜக, இப்போது ஒரு கோடி  பேருக்கு வேலைவாய்ப்பு கொடுப்போம் என்கிறது” என்றார். ஒன்றிய அரசின் அமலாக்க இயக்குநரகத்தின் நடவடிக்கை கள் குறித்து, “எங்களை நசுக்க முயன்றாலும், அதை எதிர்கொள்ள தயாராக உள்ளோம். உண்மை ஒருநாள் வெளியில் வரும்” என்று  கூறினார்.  யாருக்கு எங்கு இடம் கொடுக்க வேண்டும் என்பது  தமிழக மக்களுக்கு நன்றாகத் தெரியும் என அவர் தெரிவித்தார். தவெகவுடன் காங்கிரஸ் இணைகிறது என்ற நயினார் நாகேந்திரனின் கருத்தை மறுத்த அவர், “நாங்கள் வலிமை யான திமுக கூட்டணியில் உள்ளோம். தவெகவுடன் கூட்டணி வைக்க முயற்சியே இல்லை. கட்சி தலைமை கூறுவதுதான் அதிகாரப்பூர்வமான செய்தி” என்று தெளிவுபடுத்தினார்.

11 ஆவது இடத்தில் தமிழ்நாடு

சென்னை: ஒவ்வொரு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி  உள்ளிட்டவற்றை எடை போடும் அளவுகோல்களில் முக்கிய மானது வேலையின்மை விகிதம். வேலை செய்யத் தகுதியும் விருப்பமும் இருந்தும் வேலை கிடைக்காமல் இருப்பவர்களின் சதவீதமே இந்த வேலையின்மை விகிதம்.  தேசிய புள்ளிவிவர அலுவலகத்தின் (NSO) காலமுறை தொழிலாளர் படை கணக்கெடுப்பு (PLFS) அடிப்படையில் ஆண்டுக்கு நான்கு முறை இந்தத் தகவல்கள் வெளியிடப்படு கின்றன. அதன்படி, ஜூலை - செப்டம்பர் 2025 எனும் மூன்றா வது காலாண்டுக்கான புதிய புள்ளிவிவர அறிக்கை வெளியிடப் பட்டுள்ளது.  இந்த அறிக்கையில், தமிழ்நாட்டின் வேலையின்மை விகிதம் 5.7% என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய மாநிலங்களில் வேலையின்மை குறைவாக உள்ள மாநிலங்களின் பட்டியலில்  தமிழ்நாடு 11 ஆவது இடம் பிடித்துள்ளது. இந்தியாவில் மிகக்  குறைந்த வேலையின்மை விகிதம் கொண்ட முதல் மாநிலமாக  2.2 சதவீதத்துடன் குஜராத் உள்ளது. அதனைத் தொடர்ந்து கர்நாடகா 2.8 சதவீதத்துடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறது.

காயமடைந்தவர்களிடம் விசாரணை

கரூர்: கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப்.27 அன்று விஜய் பங்கேற்ற தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரி ழந்தனர். 110 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக  உச்சநீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஞாயிறன்று காலை முதல்  சிபிஐ அதிகாரிகள் பல்வேறு குழுக்களாகச் சென்று கரூர் வெங்க மேடு பகுதியில் உள்ள விவிஜி நகர் மற்றும் சிவலிங்க ஆசாரி யார் தெருவில் வசிக்கும் நெரிசலில் சிக்கி காயமடைந்த உஷா  மற்றும் அவரது தாய் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்ட னர்.

6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரையாண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு

சென்னை: 6 முதல் 12 ஆம் வகுப்பு  வரையிலான மாண வர்களுக்கு அரை யாண்டுத் தேர்வு அட்ட வணையை பள்ளிக் கல்வித்துறை வெளி யிட்டது. 6 முதல் 9 ஆம்  வகுப்பு மாணவர் களுக்கு டிச.15 முதல் டிச.23 ஆம் தேதி வரை  அரையாண்டு தேர்வு நடைபெறும். 10 முதல்  12ஆம் வகுப்பு மாண வர்களுக்கு டிச.10 முதல் 23 ஆம் தேதி வரை  அரையாண்டு தேர்வு நடைபெறும் என அறிவித்துள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.