நெட்டூர் பட்டியலின இளைஞர்கள் மீதான தாக்குதல் தென்காசி ஆட்சியரகம் முன்புசிபிஎம், தீ.ஒ. முன்னணி போராட்டம்!
3 Jun 2026, 8:48 pm
<p><strong>நெட்டூர் பட்டியலின இளைஞர்கள் மீதான தாக்குதல் தென்காசி ஆட்சியரகம் முன்புசிபிஎம், தீ.ஒ. முன்னணி போராட்டம்!</strong></p><p>தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டம் நெட்டூர் கிராமத்தில் பட்டியலின இளைஞர்களை சரமாரியாக அரிவாளால் வெட்டிய கும்பல் மீது நடவடிக்கை எடுக்காத வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, நெட்டூர் கிராம மக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர், புதன்கிழமையன்று (ஜூன் 3) தென்காசி மாவட்ட ஆட்சியரகம் முன்பு பெருந்திரள் போராட்டம் நடத்தினர். கே. சாமுவேல் ராஜ், கே.ஜி. பாஸ்கரன், பி.உச்சி மாகாளி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். (செய்தி - 3)</p>
