நெட்டூரில் பட்டியலின மக்கள் மீது கொடூரத் தாக்குதல் தென்காசி ஆட்சியரகம் முன்பு சிபிஎம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி பெருந்திரள் போராட்டம்!
3 Jun 2026, 9:08 pm

நெட்டூரில் பட்டியலின மக்கள் மீது கொடூரத் தாக்குதல் தென்காசி ஆட்சியரகம் முன்பு சிபிஎம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி பெருந்திரள் போராட்டம்!

தென்காசி, ஜூன் 3- தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டம் நெட்டூர் கிராமத்தில் பட்டியலின இளைஞர்களைச் சரமாரியாக அரிவாளால் வெட்டிய கும்பல் மீது நடவடிக்கை எடுக் காத வருவாய்த்துறை மற்றும் மாவட்ட நிர்வா கத்தைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் நெட்டூர் கிராம மக்கள் பங்கேற்ற பெருந்திரள் போராட்டம் புதனன்று தென்காசி மாவட்ட ஆட்சியரகம் முன்பு நடைபெற்றது. நெட்டூர் கிராமத்தில் கடந்த 5 மாதங்களில் பட்டியலின மக்கள் மீது 8 வன்கொடுமைத் தாக்குதல்கள் நடந்துள்ளன. இவைகள் மீது ஆலங்குளம் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காததே தொடர் வன்முறைக்குக் கார ணம் எனச் செய்தியாளர்களிடம் கிராம மக்கள் குற்றம்சாட்டினர். மேலும், மாவட்ட நிர்வா கமோ, வருவாய்த்துறை அதிகாரிகளோ இன்றுவரை பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்கவில்லை என்றும் அவர்கள் வேதனை தெரிவித்தனர். 500-க்கும் மேற்பட்டோர் திரண்ட போராட்டம் இந்த அலட்சியப் போக்கைக் கண்டித்து நடைபெற்ற பெருந்திரள் ஆர்ப்பாட்டத் திற்குத் தீண்டாமை ஒழிப்பு முன்னணி துணைத் தலைவர் கே.சாமுவேல்ராஜ் தலைமை வகித்தார். சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் கே.ஜி.பாஸ்கரன், மாவட்டச் செயலாளர் பி.உச்சிமாகாளி, சிபிஐ மாவட்டச் செயலாளர் இசக்கிதுரை, சிபிஎம் தென்காசி வட்டாரச் செயலாளர் பட்டாபி ராமன் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கட்சியினருக்கும் போலீ சாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. முக்கியக் கோரிக்கைகள் தாக்குதல் நடத்திய அனைவரையும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் மற்றும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். வன்முறையால் சேதமடைந்த கார், ஆட்டோ, கடைகள் மற்றும் ஆயிரம் பேருக்காகத் தயாரிக்கப்பட்டு வீணான உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்து இழப்புகளுக்கும் முழுமையான அரசு நிவா ரணம் வழங்க வேண்டும். காயமடைந்தவர்களின் குடும்பத்தின ருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். நெட்டூரில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள புறக் காவல் நிலையத்தை மீண்டும் திறக்க வேண்டும். சமூக விரோதிகள் மது அருந்தும் கூடமாக மாறியுள்ள, நீர்நிலை புறம்போக்கு நிலத்தில் அமைந்துள்ள பன்றிக் குடிசை களை அகற்ற வேண்டும். நெட்டூர் மாதாகோ வில் தெரு பகுதிக்குத் தனி நியாயவிலைக் கடை, பட்டியலின மக்கள் பயன்படுத்தும் கல்லறைத் தோட்டத்திற்குப் பட்டா மற்றும் சுற்றுச்சுவர் அமைத்தல், மாணவர்களுக்குப் பாதுகாப்பான இலவச பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இப்போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

சமூக விரோதக் கூடாரமான குடிசைகள் அகற்றப்படும் பேச்சுவார்த்தையில் மாவட்ட ஆட்சியர் உறுதி

நீதி கேட்டு மாவட்ட ஆட்சியரகம் முன்பு போராட்டத்தில் ஈடு பட்ட மக்களை, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலை மையிலான போலீசார் உள்ளே நுழையவிடாமல் தடுத்த தால் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட வருவாய் அதிகாரி மற்றும் சார் ஆட்சியர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனப் போராட்டக்காரர்கள் உறுதியாக நின்றனர். இதன்பின்னரே சார் ஆட்சியர் வைஷ்ணவி பால், மாவட்ட வருவாய் அதிகாரி ஜெயச்சந்திரன் ஆகியோர் வந்து மக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தனர். தொடர்ந்து, 25 பேர் கொண்ட குழுவினர் மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங்கை நேரில் சந்தித்துப் பேசினர். நெட்டூர் கிராம மக்களின் கோரிக்கைகளை விரிவாகக் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர், “சமூகவிரோதக் கூடாரமாக இருக்கும் பன்றிக் குடிசைகள் உடனடியாக அகற்றப்படும்; புறக் காவல் நிலையம் மீண்டும் அமைக்கப்படும்” என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என உறுதியளித்தார். இதன்பின்னரே போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.