தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நெட்டூர் சாதிவெறித் தாக்குதல்: குற்றவாளிகளைக் கிராமத்தை விட்டு அகற்றிடுக! ஜூன் 3-ல் தீண்டாமை ஒழிப்பு முன்னணி-சிபிஎம் பெருந்திரள் போராட்டம்

31 May 2026, 8:50 pm
நெட்டூர் சாதிவெறித் தாக்குதல்: குற்றவாளிகளைக் கிராமத்தை விட்டு அகற்றிடுக!  ஜூன் 3-ல் தீண்டாமை ஒழிப்பு முன்னணி-சிபிஎம் பெருந்திரள் போராட்டம்

நெட்டூர் சாதிவெறித் தாக்குதல்: குற்றவாளிகளைக் கிராமத்தை விட்டு அகற்றிடுக! ஜூன் 3-ல் தீண்டாமை ஒழிப்பு முன்னணி-சிபிஎம் பெருந்திரள் போராட்டம்

தென்காசி/சென்னை, மே 31- தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நெட்டூர் கிராமத்தில் பட்டியலின மக்கள் மீது நடத்தப் பட்ட கொடூரமான சாதிவெறித் தாக்குதலைக் கண்டித்தும், வன்கொடுமையாளர்களைக் கிரா மத்தை விட்டு வெளியேற்ற வலியுறுத்தியும் தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜூன் 3 அன்று பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெறவுள்ளது.

முன்னதாக, இத்தாக்குதலால் வடுக்களுட னும் அச்சத்தோடும் தவிக்கும் நெட்டூர் கிராம பட்டியலின மக்களைத் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் சிபிஎம் தலைவர்கள் மே 31 அன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

மணவீட்டில் அரங்கேறிய கொடூரம் நெட்டூர் கிராமம் ஆர்.சி. மாதா கோவில் தெருவில் பட்டியலினப் பகுதியில் நடைபெற்ற திரு மண ஏற்பாடுகளைக் கண்டு ஆத்திரமடைந்த சாதி வெறி கும்பல், கடந்த மே 28 அன்று தகராறில் ஈடு பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக, மே 29 திரு மணத்தன்று மாலையில் மணவீட்டில் கூடியிருந்த வர்கள் மீது பயங்கர ஆயுதங்களுடன் புகுந்து இக் கும்பல் சரமாரியாக வெறித்தாக்குதல் நடத்தி யுள்ளது.

கண்ணில் பட்டவர்களையெல்லாம் அரிவா ளால் வெட்டிய இக்கோரச் சம்பவத்தில் ரமேஷ் (49), சந்தோஷ் குமார் (21), அருள்மாறன் (23), ராயப்பன் (18), ராம்குமார் (20) மற்றும் மாடசாமி (19) ஆகிய 6 பேர் படுகாயமடைந்து இரத்த வெள்ளத் தில் சரிந்தனர்.

அவர்கள் அனைவரும் பாளையம் கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், ஆர்.சி. தெரு பள்ளிக்கூடம் அருகே இளைஞர் ஒருவரை வெட்டிய அக்கும்பல், அருகில் இருந்த கார் மற்றும் கடையையும் அடித்துச் சேதப்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தைக் கண்டித்துக் கிராம மக்கள் நடத்திய தொடர் போராட்டத்தின் விளைவாக, இது வரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறையின் அலட்சியமே காரணம் பாதிக்கப்பட்ட மக்களைத் தலைவர்கள் சந்தித்தபோது, பொதுமக்கள் தங்களின் குமு றல்களைப் பகிர்ந்துகொண்டனர். அப்பகுதி கடைப் பெண்மணி ஒருவர் கூறுகையில், “ஒருவித நடுக்கத்துடன் என் பிள்ளைகளைக் கடைக்குள் பூட்டி வைத்திருந்தேன். அரிவாளுடன் வந்தவர் களிடம் ‘நாங்க உன்ன என்னப்பா செஞ்சோம்’ எனக் கேட்டதும், கடையை விட்டு நகர்ந்து தெருவில் நின்ற மற்றொரு இளைஞரைத் தாக்கினர்” என அழுதுகொண்டே கூறினார்.

ஆர்.சி. சர்ச் கல்ல றைத் தோட்டத்தில் உள்ள கல்லறைகளைச் சேதப் படுத்துவது என இக்கும்பல் தொடர் இன்னல் களைக் கொடுத்து வந்துள்ளது. கடந்த 5 மாதங்க ளில் மட்டும் இப்பகுதியில் 8 வன்கொடுமைச் சம்ப வங்கள் நடந்துள்ளன.

இதுகுறித்து மக்கள் புகார் அளித்தும் ஆலங்குளம் காவல்துறை வழக்குப் பதியாமல், சமரசம் பேசியே காலம் கடத்தியுள்ளது.

இந்த அலட்சியமே இத்தகைய பெரும் வன் முறைக்குக் காரணமாக அமைந்துள்ளது என மக்கள் குற்றம்சாட்டினர்.

குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய வேண்டும்: தலைவர்கள் வலியுறுத்தல் இச்சம்பவம் குறித்து விவரித்து, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, பொதுச் செய லாளர் பி.சுகந்தி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை யில், வன்கொடுமையாளர்களை எஸ்.சி/எஸ்.டி சட்டப்படி கிராமத்தை விட்டு வெளியேற்ற மாவட்ட ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளரும் உத்தர விட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

கிராமத்தில் மக்களை நேரில் சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் துணைத்தலைவர் கே.சாமுவேல்ராஜ், “பட்டியலின மக்கள் பகுதியில் பன்றிக் கூடாரம் அமைத்து வன்முறையில் ஈடு படும் குற்றவாளிகள் தப்பிப்பதற்குக் காவல்துறையே காரணமாக உள்ளது. உடனடியாக அப்பன்றிக் கூடாரத்தை அப்புறப்படுத்த வேண்டும்.

முன்னர் இப்பகுதியில் இருந்த புறக்காவல் நிலையம் மாற்றப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது; மீண்டும் அங்குப் புறக்காவல் நிலையம் அமைக் கப்பட வேண்டும். கைது செய்யப்பட்டவர்கள் மீது குண்டர் சட்டம் பாய வேண்டும்.

பாதிக்கப்பட்டோ ருக்கு உரிய நிவாரணமும், காயமடைந்த இளை ஞர்களின் மறுவாழ்விற்கு அரசு வேலை வழங்கிட வும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம்.

வரு வாய்த்துறை அதிகாரிகள் யாரும் இதுவரை மக்களைச் சந்திக்காதது சாதியப் போக்கிற்குத் துணை போகும் நடவடிக்கையாகும். பாதிக்கப் பட்ட மக்களுக்குச் செங்கொடி இயக்கம் என்றும் அரணாக இருக்கும்” என்றார்.

இந்நிகழ்வில் சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.அர்ஜூனன், மாநிலக்குழு உறுப்பி னர் கே.ஜி.பாஸ்கரன், மாவட்டச் செயலாளர் பி. உச்சிமாகாளி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாநிலப் பொருளாளர் கே.முருகன், மாவட்டத் தலைவர் பி.அசோக்ராஜ், மாவட்ட நிர்வாகிகள் குணசீலன், பி.கிருஷ்ணமூர்த்தி ஆகி யோர் பங்கேற்றனர்.

மேலும் தமிழ்ப்புலிகள் கட்சி மாவட்டச் செயலாளர் கனகராஜ், ஐந்திணை மக்கள் கட்சி நிர்வாகிகள், திருச்சபை எஸ்.சி/எஸ்.டி பணிக்குழு ஜார்ஜ், ஓய்வுபெற்ற நீதிபதி ராம்ராஜ், பீடித்தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் மகாவிஷ்ணு, தர்மாகனி மற்றும் ஆலங்குளம் தாலுகாச் செயலாளர் கனகராஜ் உள்ளிட்டோர் திர ளாகக் கலந்துகொண்டு மக்களுக்குத் தங்களின் ஆதரவை வெளிப்படுத்தினர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.