நெதர்லாந்து சாம்பியன் பட்டம் வெல்லும் பிரபல கணிதவியலாளர் ஜோச்சிம் கிளெமென்ட் கணிப்பு
11 Jun 2026, 8:54 pm

நெதர்லாந்து சாம்பியன் பட்டம் வெல்லும் பிரபல கணிதவியலாளர் ஜோச்சிம் கிளெமென்ட் கணிப்பு

உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் 3 முறை இறுதிப்போட்டி வரை முன்னேறிய சாத னை படைத்திருந்தாலும், நெதர்லாந்து அணி இதுவரை ஒருமுறை கூட சாம்பியன் பட்டத்தை வென்றதில்லை.

அந்த அணி நடப்பாண்டு சீசனில் ரொனால்ட் கூமன் தலைமையில் கள மிறங்குகிறது. ஜூன் 14 அன்று நடை பெறும் தனது முதல் ஆட்டத்தில் நெதர்லாந்து அணி ஜப்பானை எதிர் கொள்கிறது.

‘குரூப் எப்’ பிரிவில் இடம்பெற்றுள்ள அந்த அணி மற்ற 2 லீக் ஆட்டங்களில் சுவீடன், துனிசியா ஆகிய அணிகளுடனும் விளையாட வுள்ளது.

இந்நிலையில், கடந்த மூன்று கால்பந்து உலகக்கோப்பைகளின் சாம்பியன்களைத் துல்லியமாகக் கணித்த ஜெர்ம னியைச் சேர்ந்த கணிதவியலாள ரும், பொருளா தார நிபுணருமான ஜோச்சிம் கிளெ மென்ட், தற்போது 2026 உலகக் கோப்பைக்கான தனது கணிப்பை வெளியிட்டுள்ளார்.

அவரது புள்ளி விவர மற்றும் கணித மாதிரியின் கணக்கீடுகளின்படி, இந்த முறை நெதர்லாந்து அணி புதிய உலக சாம்பி யனாக உருவெடுக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இறுதிப் போட்டி யில் நெதர்லாந்து அணி போர்ச்சுக்க லை எதிர்கொண்டு வெற்றி பெறும் என்று அவரது கணக்கீடுகள் காட்டு கின்றன.

தனிநபர் ஜிடிபி, மக்கள் தொகை, காலநிலை, பிபா தரவரிசை, அதிர்ஷ்டம் போன்ற பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு ஜோச்சிம் கிளெமென்ட் இந்த கணிப்பு மாதிரியை உருவாக்கியுள்ளார்.

இவர் இதற்கு முன்னதாக 2014இல் ஜெர்மனி, 2018இல் பிரான்ஸ் மற்றும் 2022இல் அர்ஜெண்டினா ஆகிய அணிகள் உலகக்கோப்பையை வெல்லும் என்று துல்லியமாகக் கணித்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

எனினும்,”கால்பந்து போட்டி களில் 45% முடிவுகள் அதிர்ஷ்டத்தைச் சார்ந்தது என்பதால், இந்த கணிப்பை மிகத் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்” என்றும் அவர் ரசிகர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.