நெட் ரிசல்ட், கம்ப்ளீட் வாஷ் அவுட்
10 Apr 2026, 5:30 am

நெட் ரிசல்ட், கம்ப்ளீட் வாஷ் அவுட்

தமிழக பா.ஜ-வில் திட்டமிட்டபடி எல்லாம் சரியாக நடந்து கொண்டிருக்கிறதாம். வேட்பாளர் தேர்வில் ஏதோ சலசலப்பு நடப்பதாக வேண்டுமென்றே சிலர் கதை கட்டுகிறார்களாம். இப்படியாக ஒரு அதிரடி பிட்யூ கொடுத்து இருப்பவர் வேறு யாருமல்ல. பா.ஜ-வின் டெலிஷன் மன்னன் எச். ராஜா தான்.

கடந்த சில வாரங்களாக உடல்நலக் குறைவு காரணமாக ஓயவில் இருந்த திருவாளர் ராஜா, தற்போது தேர்தல் களத்தில் "நானும் இருக்கிறேன்" என்று காட்டிக் கொள்வதற்காக, கடந்த ஞாயிறன்று திருத்தணிக்குப் போனபோது திடீர் பேட்டி கொடுத்திருக்கிறார். பா.ஜ-க-வின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை சென்ற தேர்தலில் போட்டியிடாராம். இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லையாம். இது சாதாரண விஷயமாம். இதைப் பெரிதாக்கி, சண்டையை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்களாம் பத்திரிகையாளர்களிடம் புலம்பியிருக்கிறார் எச்.ராஜா.

அதிமுக-வை நாம் வளைத்துப் போட வேண்டுமென்றால் அண்ணாமலையைத் கழற்றிவிட வேண்டும் என்று மோடி-அமித் ஷா அன் கோ முடிவெடுத்ததும், அதன் காரணமாக ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை சமயம் கிடைக்கும்போதெல்லாம் சரவெடி கொளுத்திப் போட்டுக் கொண்டிருப்பதும் அரசியல் வட்டாரத்தில் அனைவருக்கும் அத்தப்படியான விஷயம்.

பலன் தராத ஸ்டண்ட்கள்: தனக்குத்தானே சவுக்கடி கொடுத்துக் கொண்டு பில்டப் எல்லாம் செய்து பார்த்தும் எந்தப் பிரயோஜனமும் இல்லாமல் போய் விட்டதே என்கிற விரக்தியில் இருந்த அண்ணாமலை, தந்தையார் உடல்நிலையைக் காரணமாகச் சொல்லி ஒதுங்கிக் கொள்வதாக ஸ்டண்ட் அடித்துப் பார்த்தார். அதுவும் 'நோ யூஸ்' என்று ஆகிவிட்டது.

துண்டு போட்டு காத்திருந்தவர்கள்: கிடைத்த கவர்னர் பதவியையும் விட்டு விட்டு வந்து, திரும்பத் திரும்ப தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றுக் கொண்டிருக்கிற தமிழிசைக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கொடுத்ததில், துண்டு போட்டுக் காத்திருந்த கே.டி. ராகவன், கரு. நாகராஜன், எச். ஜி.குரியா, வினோஜ் பி. செல்வம் என்று சென்னை தலைவர்கள் அத்தனை பேரும் கடுங்கோபத்துடன் சவுண்டு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழக பாஜக-வைப் பொறுத்தவரை, இப்படி ஆரம்பமே உள்ளடி உத்திகளுடன், உரத்து ஒலிக்கும் முணுமுணுப்புகள், உச்சகட்ட கோஷ்டிப் பூசல் என்று நில விக்கெட்டாக இருக்கும் நிலையில், பிற மாநில முதல்வர்கள் எல்லோரும் ஒவ்வொருவராக வந்து சேரக் காட்டினாலும், "நெட் ரிசல்ட் கம்ப்ளீட் வாஷ் அவுட் தான்" என்பதே அரசியல் பார்வையாளர்களின் ஏகோபித்த கருத்தாக உள்ளது.