ரெக்கை கட்டிப் பறக்குதய்யா! நிகர அந்நிய முதலீடுகள் சரிவு
29 Dec 2025, 3:24 pm
<p><strong>ரெக்கை கட்டிப் பறக்குதய்யா! நிகர அந்நிய முதலீடுகள் சரிவு</strong></p>
<p>இன்சூரன்ஸ் துறையில் 100 சதவீத அந்நிய முதலீடுகளுக்கு கதவுகளைத் திறந்து வைக்கும் வேளையில், இந்திய முதலீடுகள் அந்நிய நாடுகளுக்கு சிறகடிக்கிற போக்குகள் வளர்ந்துள்ளன. மொத்த வர்த்தக டீல்களில் வெளி நாட்டு நிறுவனங்களை இந்திய நிறுவனங்கள் “இணைப்பு & கையகப்படுத்தல்” (M & A) என்பது 2025 இல் 25 சதவீதமாக உயர்ந்துள்ளன. இதுவே 2023 இல் 10 % ஆக, 2024 இல் 20 % ஆக இருந்தது. இந்திய நிறுவனங்கள் வெளி நாட்டு நிறுவனங்களில் “இணைப்பு & கையகப்படுத்தல்” (M & A) வாயிலாக செய்துள்ள முதலீடுகள் 24.8 பில்லியன் டாலர்கள். அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 2,23,200 கோடிகள். இந்த “இணைப்பு & கையகப்படுத்தல்” (M & A) வேட்டையில் அதானி போர்ட், டாடா மோட்டார்ஸ், காக்னிசண்ட், இன்ஃபோசிஸ் போன்ற பெரும் நிறுவனங்கள் விளையாடியுள்ளன. ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் எல்லாம் உள்ளே வந்த அந்நிய முதலீடு களை விட இந்தியாவை விட்டு வெளியேறிய முதலீடுகள் அதிகமாக உள்ளன. உதாரணமாக செப்டம்பர் 2025 இல் மொத்த அந்நிய முதலீடுகளின் உள் வருகை 6.6 பில்லியன் டாலர்கள். அதே மாதத்தில் இந்தியாவில் இயங்கும் அந்நிய நிறுவனங்கள் லாபமாக தங்கள் நாட்டிற்கு எடுத்துச் சென்று இருப்பது 5.2 பில்லியன் டாலர்கள். இந்திய நிறுவனங்களே அந்நிய மண்ணிற்கு கொண்டு சென்ற முதலீடுகள் 3.8 பில்லியன் டாலர்கள். ஆகவே நிகர வரத்து மைனஸ் 2.4 பில்லியன் டாலர்களாக உள்ளன. </p>
