நெஸ்லே மற்றும் கேஃப்சி நிறுவனங்களுக்கு உணவுப் பாதுகாப்புத்துறை நோட்டீஸ்!
12 Jun 2026, 5:28 pm

நெஸ்லே(Nestle) மற்றும் கேஃப்சி(KFC) ஆகிய நிறுவனங்கள் மீது எழுந்துள்ள சுகாதார குறைபாடு புகார் குறித்து விளக்கம் அளிக்க உணவுப் பாதுகாப்புத்துறை நோட்டீஸ் விடுத்துள்ளது.

உணவுப் பாதுகாப்பு தொடர்பான புகார்கள் அதிகரித்து வரும் நிலையில், முன்னணி உணவு நிறுவனங்களான நெஸ்லே மற்றும் கேஎஃப்சி மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் கவனம் ஈர்த்துள்ளன.

இதையடுத்து, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) இரு நிறுவனங்களிடமும் விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேகி (Maggi) நூடுல்ஸ் பாக்கெட்டில் புழுக்கள் இருந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் நெஸ்ட்லே நிறுவனத்திடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது. அதேபோல், சுகாதாரக் குறைபாடுகள் தொடர்பாக எழுந்த புகாரையடுத்து கேஎஃப்சி நிறுவனத்திற்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் முதலீட்டாளர்கள் மத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக, நெஸ்லே நிறுவனத்தின் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் சுமார் 3 சதவீதம் வரை சரிவடைந்துள்ளது.