“இந்திய எல்லைப் பகுதியை ஆக்கிரமித்துள்ளோம்” : நேபாள பிரதமர் பேச்சு
1 Jun 2026, 9:53 pm

“இந்திய எல்லைப் பகுதியை ஆக்கிரமித்துள்ளோம்” : நேபாள பிரதமர் பேச்சு

காத்மாண்டு, ஜூன் 1— இந்திய எல்லைப் பகுதிகள் சிலவற்றை நேபாளமும் ஆக்கிரமித்துள்ளது என்று நேபாள பிரதமர் பாலந்திர ஷா ஞாயிற்றுக் கிழமை (மே 31) அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை பெரும் அதிர்ச்சியை கிளப்பி யுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட கால மாக நீடித்து வரும் காலாபாணி (Kalapani) பிராந்தியத்தின் இறையாண்மை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போது பிரதமர் ஷா இந்தக் கருத்தை தெரிவித்தார்.

பிரதமர் என்ன சொன்னார்? “இது உங்களுக்கு விசித்திரமாகத் தோன்ற லாம். ஆனால், நான் பிரதமரான பிறகு சமீ பத்தில்தான் இந்த உண்மையை அறிந்து கொண்டேன்.

இந்தியா மட்டும் நேபாள எல்லையை ஆக்கிரமிக்கவில்லை. நேபாள மும் பல இடங்களில் இந்திய எல்லைப் பகுதி களை ஆக்கிரமித்துள்ளது.

நாம் இந்தியா, சீனாவுடன் மட்டுமின்றி இங்கிலாந்துடனும் (UK) தொடர்பு கொண்டுள் ளோம்.

பிரிட்டிஷார் இந்தியாவை விட்டு வெளி யேறிய காலத்திலிருந்தே இப்பிரச்சனை நீடிப்பதால், இங்கிலாந்தும் இதில் அக்கறை காட்ட வேண்டும் என்பதே எங்கள் நிலைப் பாடு.

இந்த விவகாரங்கள் அனைத்தும் பேச்சுவார்த்தை மற்றும் தூதரக விவாதங்கள் மூலம் தீர்க்கப்பட வேண்டும்” என்று அவர் கூறினார்.

ஷாவின் உரையை தொடர்ந்து, அவரு டைய கட்சியான ராஷ்டிரிய ஸ்வதந்திரா கட்சி யின் மூத்த தலைவர் ரபி லாமிச்சானே (Rabi Lamichhane) மறுநாளே (ஜூன்-1) ஐந்து நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார்.

எல்லைப் பிரச்சனையின் பின்னணி இந்தியாவின் வடமேற்கு எல்லையில் அமைந்துள்ள லிபுலேக் (Lipulekh), லிம்பிய துரா (Limpiyadhura) மற்றும் காலாபாணி பிராந்தியங்கள் இந்திய-நேபாள உறவில் நீண்ட காலமாக பிரச்சனைக்குரிய பகுதிக ளாகவே இருந்து வருகின்றன.

சமீபத்தில் லிபுலேக் பாதை வழியாக கைலாஷ் மானசரோவர் யாத்திரை செல்ல இந்தியா அறிவித்தபோது இப்பிரச்சனை மீண்டும் வெடித்தது.

அப்போது நேபாளம் இந்தியா மற்றும் சீனா இரு நாடுகளுக்கும் தூதரகக் கடிதங்களை அனுப்பியது.

எனி னும் லிபுலேக் கணவாய் என்பது தனது எல்லைக்குட்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக மற்றும் யாத்திரை வழித்தடம் என்று இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தது.

முன்னதாக 2019 நவம்பரில் இந்தியா வெளியிட்ட புதிய அரசியல் வரைபடத்தில் இப் பகுதிகள் இந்திய எல்லைக்குள் காட்டப்பட்டன.

அதனைத் தொடர்ந்து 2020 இல் கே.பி. சர்மா ஒலி பிரதமராக இருந்தபோது நேபாளம் தனது அதிகாரப்பூர்வ வரைபடத்தில் லிபுலேக், லிம்பியதுரா மற்றும் காலாபாணி பகுதிகளை இணைத்து அரசியல் சாசனத்தைத் திருத்தியது.

நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு பிரதமர் ஷாவின் இந்தப் பேச்சை தொ டர்ந்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து கோஷமிட்டன. நேபாள காங்கிரஸ், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் இந்திய எல்லையை நேபாளம் எங்கு ஆக்கிர மித்துள்ளது என்பதை பிரதமர் உடனடியாக விளக்க வேண்டும் என்றும், அவருடைய இந்த உரையை நாடாளுமன்றப் பதிவிலிருந்து நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

நேபாள காங்கிரஸ் கட்சியின் தலைமைக் கொறடா பஸானா தாப்பா, “நேபாளத்திற்கும் இந்தியாவிற்கும் இடையே எல்லைப் பிரச்சனைகள் இருப்பது உண்மைதான். ஆனால் நேபாளம் இந்தியப் பகுதியை ஆக்கிரமித்துள்ளதாக பிரதமர் கூறுகிறார்.

இது துல்லியமாக எங்கு நடந்துள்ளது? இதைப்பற்றி இந்தச் சபைக்கு பிரதமர் விளக்க வேண்டும்.

இது மிகவும் தீவிரமான மற்றும் கண்டிக்கத்தக்க அறிக்கை” என்று அதிருப்தி தெரிவித்தார். நேபாள கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் மல்லா, “நாட்டின் பிரத மரே நாடாளுமன்றத்தில் இப்படிப் பேசுவது தேசத்தின் ஒருமைப்பாட்டைக் கெடுக்கும்.

இது சாதாரண விஷயம் அல்ல. ஏதோ சாதா ரண உரையாடலில் பேசுவது போல் இந்த விஷயத்தை அவர் கையாண்டுள்ளார்.

எந்த வொரு நாட்டின் தலைவரும் மேடையில் நின்று தங்கள் நாடு மற்றொரு நாட்டின் நிலத்தை ஆக்கிரமித்துள்ளது என்று கூற முடியுமா? இது எவ்வளவு பெரிய தவறு?” என்று கேள்வி எழுப்பினார்.

வெளியுறவு அமைச்சகம் விளக்கம் பிரதமர் ஷாவின் கருத்துக்கள் பெரும் புயலை கிளப்பியதைத் தொடர்ந்து, நேபாள வெளியுறவுத்துறை அமைச்சகம் அன்று மாலையே விளக்க அறிக்கை வெளியிட்டது.

அதில், பிரதமர் குறிப்பிட்ட விஷயம் முதன் மையாக “தாஸ்கஜா” (Dasgaja — மனிதர்கள் நடமாடக் கூடாத இரு நாடுகளுக்கும் இடைப் பட்ட நோ-மேன்ஸ் லேண்ட்) பகுதியிலான ஆக்கிரமிப்பு மற்றும் எல்லை தாண்டிய நிலப் பயன்பாடு (cross-border occupa tion) தொடர்பானது மட்டுமே என்று விளக்க மளித்தது

. நதி எல்லைப் பகுதிகளில் எல்லைகளை நிர்ணயிக்கும்போது நேபாளமும் இந்தியா வும் “நிலையான எல்லைக் கொள்கையை” (Fixed Boundary Principle) ஏற்றுக்கொண்ட தால், ஒரு நாட்டின் குடிமக்கள் தொழில்நுட்ப ரீதியாக மற்றொரு நாட்டுக்குச் சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்யும் அல்லது வசிக்கும் சூழ்நிலை சில இடங்களில் ஏற் பட்டுள்ளது.

தொழில்நுட்பக் குழு நடத்திய ஆய்வுகளின்படி, தற்போது நேபாள மக்கள் பயன்படுத்தி வரும் சில நிலங்கள் எல்லைக் கோடு வரையறையின்படி இந்திய எல்லைக்குள் வரக்கூடும்.

பிரதமர் குறிப்பிட்ட விஷயமும் இந்த தொழில்நுட்ப யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்டதுதான் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாலந்திர ஷா பேச்சு தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை உடனடியாக எந்த கருத் தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.