நேபாள வெள்ளம் : உலக நாடுகளுக்கு எச்சரிக்கை
25 Sept 2026, 7:55 pm

நேபாள வெள்ளம் : உலக நாடுகளுக்கு எச்சரிக்கை

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, அதிகரித்து வரும் காலநிலை மாற்றத்தின் அபாயங்கள் குறித்து உலக நாடுகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை என்று அந்நாட்டு பிரதமர் பாலேந்திர ஷா ஐ.நா அவையில் தெரிவித்தார். உலகளவில் பசுமைக்குடில் வாயு உமிழ்வில் நேபாளத்தின் அளவு வெறும் 0.1 சதவீதத்திற்கும் குறைவு தான். இந்த நெருக்கடியை நாங்கள் உருவாக்கவில்லை. ஆனால் இதற்கான விலையை நாங்கள் கொடுத்துக்கொண்டிருக்கிறோம். இந்நிலையில் நேபாளம் இந்த பேரிடர்களுக்கு தகவமைத்துக் கொள்ள உதவி செய்ய முன்வருமாறு உலக நாடுகளுக்கு அவர் கோரிக்கையும் விடுத்தார்.