நியோமேக்ஸ் திருச்சி கிளை ரூ.8 ஆயிரம் கோடி மோசடி 3 ஆண்டுகளாக புகார் கொடுத்தும் வழக்குகூட பதிவு செய்யவில்லை; பாதிக்கப்பட்டவர் பேட்டி
27 May 2026, 9:02 pm

நியோமேக்ஸ் திருச்சி கிளை ரூ.8 ஆயிரம் கோடி மோசடி 3 ஆண்டுகளாக புகார் கொடுத்தும் வழக்குகூட பதிவு செய்யவில்லை; பாதிக்கப்பட்டவர் பேட்டி

திருச்சிராப்பள்ளி, மே 27 - மதுரையை தலைமையிடமாகக் கொண்ட நியோமேக்ஸ் நிதி நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு அதிக வட்டி தருவதாகக் கூறி பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் முதலீடு பெற்றதுடன், அதன் முதிர்வு தொகையை வழங்காமல் மோசடியில் ஈடுபட்டது.

இதையடுத்து கடந்த 2022 ஆம் ஆண்டுமுதல் அந்நிறுவனம் மற்றும் அதன் நிர்வாகிகள் மீது பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர்.

பொருளாதாரக் குற்றப்பிரிவு, அமலாக்கத் துறை நடத்திய சோதனை மற்றும் விசாரணையில் ரூ.8000 கோடி மோசடி நடைபெற்றது தெரியவந்தது.

இதனிடையே இந்த நியோமேக்ஸ் நிறுவன மோசடியில் பலர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தனர்

. இந்நிலையில், திருச்சி திருவெறும்பூரைச் சேர்ந்த தம்பதியினர் திருச்சியில் நியோ மேக்ஸ் கிளையை நிறுவி பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை சுருட்டியுள்ளதாகவும், அவர்களிடமிருந்து பணத்தை மீட்டுத் தரக் கோரி பாதிக்கப்பட்டவர்கள் புதனன்று செய்தியாளர் சந்திப்பின்போது கோரிக்கை விடுத்தனர்.

ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் திருவெறும்பூர் கள்ளர் தெருவைச் சேர்ந்த நித்தியானந்தம் என்பவர் திருச்சி பிரஸ் கிளப்பில் புதனன்று செய்தி யாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறிய தாவது: பெல் நிறுவனத்தில் டெக்னீசியனாக பணியாற்றி வருபவர், அவரது மனைவி ஆகிய இருவரும் 2014 ஆம் ஆண்டு முதல் பிரகாஷ் நகரில் நியோமேக்ஸ் கிளையை நடத்தி வந்தனர்.

அதில் நான் (நித்தியா னந்தம்), எனது உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே ரூ.8000 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளோம்.

இதுகுறித்து பொருளாதாரக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் 3 ஆண்டு களாக தொடர்ந்து புகார் அளித்து வந்தாலும், தற்போதுவரை அவர்களது பெயரில் ஒரு வழக்குகூட பதிவு செய்யப்பட வில்லை. அவர்கள் சுதந்திரமாக வெளியே நடமாடி வருகின்றனர்.

புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் ரூ.40 கோடிக்கு மேல் நிலங்கள் வைத்துள்ளனர்.

அது தொடர்பான ஆவணங்களை சமர்ப்பித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை

. புதிதாக பொறுப்பேற்ற தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாகத் தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் நியோமேக்ஸ் நிறுவனத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் முதலீடு செய்துள்ளனர்.

ஒவ்வொருவரும் ரூ.10 லட்சத்திற்கும் மேல் முதலீடு செய்துள்ளதால் பல்லா யிரக்கணக்கான கோடி பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும், மற்ற கிளை களைச் சேர்ந்த 75 சதவீதம் பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டாலும், திருச்சி யைச் சேர்ந்தவர்கள் மீது இதுவரையிலும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.

எங்களது பணத்தை வைத்து அவர் ரியல் எஸ்டேட் செய்து வருகிறார். ஆனால் பணத்தை முதலீடு செய்த நாங்களோ தெருவில் நிற்கிறோம்; எனவே புதிய அரசாவது எங்கள் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்

. பெல் நிறுவனத்தைச் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்தவர்கள் மட்டும் 6000 பேர் திருச்சி நியோமேக்ஸ் கிளையில் முதலீடு செய்துள்ளதாகவும், ரூ. 5 ஆயிரம் கோடி வரை பெல் வட்டாரத்தில் மோசடி செய்துள்ளார் என்றும், அடுத்து ஒவ்வொருவராக புகார் அளிப்பார்கள் என்றும் தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்புக்குப் பிறகு பொருளாதாரக் குற்றப்பிரிவு மற்றும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம்.

அதேநேரம் பொதுமக்கள் கவர்ச்சிகரமான விளம்பரங்களை, ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம். எங்களைப் போல பணத்தை இழந்து நடுத்தெருவில் நிற்க வேண்டாம் என பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.