நியோமேக்ஸ் நிறுவன மோசடி வழக்கு 1,981 சொத்துக்கள் முதல் கட்டமாக விற்கப்பட்டுள்ளது
25 May 2026, 10:40 pm

நியோமேக்ஸ் நிறுவன மோசடி வழக்கு 1,981 சொத்துக்கள் முதல் கட்டமாக விற்கப்பட்டுள்ளது

மதுரை, மே 25- நியோமேக்ஸ் நிறுவன மோசடி வழக்கில், டி.டி.சி.பி. அங்கீகாரம் பெற்ற 9,935 சொத்து களில் முதல் கட்டமாக 1,981 சொத்துகள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறை, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்தது.

நியோமேக்ஸ் சொத்து விற்பனை தொடர்பான வழக்குகள் திங்கள்கிழமை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி பரதசக்கரவர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது பொருளாதாரக் குற்றப் பிரிவு காவல்துறை தாக்கல் செய்த அறிக்கை யில், “முதல் கட்டமாக 9,935 சொத்துகள் ஏலத்திற்கு விடப்பட்டதில் 1,981 சொத்துகள் விற்பனையாகியுள்ளன.

மீதமுள்ள 7,954 சொத்துகளுக்கு இன்று முதல் ஜூலை 2ஆம் தேதி வரை மறு ஏலம் நடைபெறும்” என தெரி விக்கப்பட்டது.

மேலும், நியோமேக்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்களில் முதலீடு செய்த வர்கள் ஏலத்தில் சொத்துகளை எடுத்தால், அதற்கான தொகையை 10 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப் பட்டது.

முதலீட்டுத் தொகையை விட ஏலத் தொகை அதிகமாக இருந்தால், கூடுதல் தொகையை செலுத்த அவகாசம் வழங்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை ஏலம் நடத்த வேண்டும் என்றும், தேவையெனில் 2 அல்லது 3 நாட்கள் வரை ஏலத்தை நீட்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து, ஒவ்வொரு நாளும் 500 மனைகள் ஏலத்தில் விடப்படலாம் என்றும், ஒவ்வொரு மனையும் இரண்டு வேலை நாட்கள் வரை ஏலத்தில் இருக்கலாம் என்றும் நீதிமன்றத்தில் முடிவு செய்யப்பட்டதாக தெரி விக்கப்பட்டது.

அதன்படி, விசாரணை அதிகாரி புதிய கால அட்டவணையை தயாரித்து எம்.எஸ். டி.சி.க்கு அனுப்பி, அதனை இணைய தளத்தில் வெளியிட வேண்டும் என்றும், புதிய அட்டவணை குறித்து உரிய விளம்பரம் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தர விட்டார்.

மேலும், பாதிக்கப்பட்ட முதலீட்டாளர் களும் ஏலத்தில் பங்கேற்கலாம் என்றும், அவர்களுக்கு இ.எம்.டி. கட்டணத்தில் விலக்கு வழங்கப்பட்டிருந்தாலும், எம்.எஸ்.டி.சி. கட்டணத்தை செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஏற்கனவே ஏலத்தில் சொத்துகளை பெற்ற பலரும் இதுவரை தொகையை செலுத்தாத நிலையில், அவர்கள் 10 நாட்க ளுக்குள் ஏலத் தொகையை கட்டாயம் செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் அறி வுறுத்தியது. அடையாளம் காணப்படாத சொத்துகள் தொடர்பான நடவடிக்கைகளை விசாரணை அதிகாரி விரைவுபடுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் அடுத்த விசா ரணையை ஜூன் 2ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.