தென் இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி நெல்லூரில் 2,640 மெகாவாட் அனல் மின் நிலையத்தை உலுக்கும் வர்க்கப் போராட்டம்”
3 Jun 2026, 9:04 pm

தென் இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி நெல்லூரில் 2,640 மெகாவாட் அனல் மின் நிலையத்தை உலுக்கும் வர்க்கப் போராட்டம்”

எஸ்இஐஎல் மின் ஆலை ஒப்பந்தத் தொழிலாளர் அதிரடி வேலைநிறுத்தம்

வேலைநிறுத்தம் 47

நெல்லூர், ஜுன் 3 - உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் தொழிலாளர் வர்க்க எழுச்சியைத் தொடர்ந்து, தென்னிந்தியாவின் முக்கியத் தொழில்துறைப் பகுதி யான ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூரிலும் ஒப்பந்தத் தொழி லாளர்களின் போர்க்குணமிக்க எழுச்சி வெடித்துள்ளது. நெல்லூர் மாவட்டம் முத்துகூர் மண்டலம் பைனாபுரம் பகுதியில் அமைந்து ள்ள, நாட்டின் மிகப்பெரிய தனியார் மின் திட்டங்களில் ஒன்றான எஸ்இஐஎல் எனர்ஜி இந்தியா லிமி டெட் (SEIL Energy) நிறுவனத்தின் 2,640 மெகாவாட் அனல் மின் வளாகத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் மே 22, 2026 முதல் தங்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

ஒப்பந்த உழைப்புச் சுரண்டல், மிகக் குறைந்த ஊதியம் மற்றும் பணிப் பாதுகாப்பற்ற அடிமைத் தனமான சூழலுக்கு எதிராகத் தொடங்கிய இப்போராட்டம் இன்று பத்தாவது நாளாக நீடித்து வர்க்கக் கொந்தளிப்பாக மாறியுள்ளது. இவ்வாலையின் கீழ் இயங்கும் சுமார் 300 முதல் 360 வரையிலான ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஒட்டு மொத்தமாகத் திரண்டு ஆலை வாயிலில் மாபெரும் தர்ணா போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

15 ஆண்டுகால உழைப்புச் சுரண்டலும் அடிமட்டத் தொழிலாளர்களின் குமுறல்களும்

முன்னர் ‘செம்ப்கார்ப் எனர்ஜி’ என்று அழைக்கப்பட்ட எஸ்இஐஎல் எனர்ஜி நிறுவனம், இந்தியாவின் ஆற்றல் பாதுகாப்பில் முக்கியப் பங்காற்றுவதாகக் கூறிக்கொண்டு பெரும் லாபத்தை ஈட்டி வருகிறது. ஆனால், இந்த ஆலை உருவா வதற்குக் கடந்த 10 முதல் 15 ஆண்டு களுக்கும் மேலாகத் தங்களின் வாழ்நாளை அர்ப்பணித்த அடி மட்டத் தொழிலாளர்களின் வாழ்வில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இவ்வாலையின் பெரும்பான்மையான முதன்மை அல்லாத (Non-core) உழைப்புப் பிரி வுகள் அனைத்தும் ஒப்பந்ததாரர் களிடம் ஒப்படைக்கப்பட்டு, அவர்கள் மூலமாகத் தொழிலாளர்களின் உழைப்பு கொடூரமாக உறிஞ்சப் பட்டு வருகிறது.ஆலை வாயி லில் திரண்டு முழக்கமிட்ட தொழி லாளர்கள் தங்களின் குமுறல் களைப் பகிர்ந்துகொண்டனர். “நாங்கள் எங்களின் இளமைக் காலம் முழுவதையும் இந்த மின் ஆலைக்காகவே தியாகம் செய்து விட்டோம். இப்போது எங்களில் பல ருக்கு 40 முதல் 50 வயதாகிறது. இந்த வயதில் எங்களுக்கு ஏதேனும் உடல்நலக் குறைவோ அல்லது ஆலைக்குள் விபத்தோ ஏற்பட்டால் எவ்விதச் சமூகப் பாதுகாப்பும் இல்லை. நிறுவனம் வெளியில் தங்களின் பாதுகாப்புத் தரத்தைப் பற்றிப் பெருமையாகப் பேசினாலும், ஒப்பந்தத் தொழிலாளர்களான எங்களின் யதார்த்த நிலை மிக வும் ஆபத்தானது” என்று ஒரு தொழி லாளி ஆதங்கத்துடன் தெரிவித்தார். கடந்த 15 ஆண்டுகளாகக் கடு மையான விலைவாசி உயர்வும் பணவீக்கமும் நீடித்து வரும் வேளை யில், இவ்வாலைத் தொழிலாளர் களுக்கு ஒருமுறை கூட ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை என்பது நிர்வாகத்தின் அப்பட்டமான வர்க்கப் பிடிவாதத்தைக் காட்டுகிறது.

குறைந்தபட்ச ஊதிய மறுப்பும் சட்டப்படியான உரிமைகள் பறிப்பும்

தொழிலாளர் சட்ட விதிகளின் படி, அனைத்து ஒப்பந்தத் தொழி லாளர்களுக்கும் தற்போதைய விலைவாசிக்கு ஏற்ப மாதக் குறைந்தபட்ச ஊதியமாக 26,000 ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்பதே தொழிலாளர்களின் முதன்மையான கோரிக்கையாகும். தற்போது ஆலையில் திறனற்ற தொழிலாளர்களுக்கு (Unskilled) வெறும் ₹12,000, பகுதித் திறன் கொண்டவர்களுக்கு (Semi-skilled) ₹13,000, மற்றும் திறன் கொண்ட தொழில்நுட்பத் தொழி லாளர்களுக்கு (Skilled) ₹15,000 முதல் ₹18,000 மட்டுமே வழங்கப் பட்டு வஞ்சிக்கப்படுகிறது.

இதனுடன், தொழிலாளர்கள் அனைவருக்கும் சட்டப்பூர்வமாக வழங்கப்பட வேண்டிய வருங்கால வைப்பு நிதி மற்றும் தொழிலாளர் அரசு காப்பீடு போன்ற பங்களிப்பு கள் முறையாகச் செலுத்தப்படாமல் அவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது. மேலும், ஆலைக்குள் பணிபுரியும் தொழி லாளர்களுக்கு முறையான கேட் பாஸ் (Gate pass) மற்றும் அடை யாள அட்டைகள் வழங்கப்பட வேண்டும் என்பதும் இவர்களின் முக்கியக் கோரிக்கையாகும்.

சிஐடியு-வின் முழுஆதரவும் வர்க்க ஒருமைப்பாடும்

ஆலை வாயிலில் தொடர்ந்து ஒன்பதாவது நாளாகத் தளர்வின்றிப் போராடி வரும் தொழிலாளர்களைச் சந்தித்து, சிஐடியு தலைவர் ஜிவி என் சலபதி முழுமையான ஆதரவை வழங்கியதோடு, இப்போராட்டக் கூட்டத்தில் எழுச்சி உரையாற்றி னார். “இந்த மின் ஆலையின் ஒட்டுமொத்த இயக்கத்திற்கும், உற்பத்திக்கும் முதுகெலும்பாக விளங்குபவர்கள் இந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் தான். ஆனால், நிர்வாகம் இவர்களைத் தற்காலிக ஊழியர்களை விட மிக மோசமாக நடத்துகிறது. ஒப்பந்ததாரர்களைக் காட்டித் தப்பிக்க முயலாமல், முதன்மை முதலாளியான (Principal employer) எஸ்இஐஎல் எனர்ஜி நிர்வாகமே நேரடியாக இப்பிரச்சனையில் தலையிட்டு, தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். அதுவரை இப்போராட்டம் ஓயாது” என்று அவர் எச்சரித்தார். ஒப்பந்தத் தொழிலாளர்களின் இந்தத் தொடர் வேலைநிறுத்தம் காரணமாக, நிலக்கரி கையாளு தல் மற்றும் பராமரிப்புப் பணிகள் மெல்ல பாதிக்கப்படத் தொடங்கி யுள்ளன. எஸ்இஐஎல் நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகள் நேரடியாகத் தலையிட்டு ₹26,000 குறைந்தபட்ச ஊதியக் கோரிக்கையை ஏற்கும் வரை தங்களின் வர்க்கப் போராட்டத்தை ஆந்திரா முழுவதும் தீவிரமாக்க தொழிற்சங்கங்கள் திட்டமிட்டுள்ளன. தி லெப்ட் வியூஸ்