நெல்லியாளம் நகராட்சி சிபிஎம் முற்றுகையால் ஏழு ஆண்டு கால இருளுக்கு விடிவு
3 Feb 2026, 4:00 pm
<p><strong>நெல்லியாளம் நகராட்சி சிபிஎம் முற்றுகையால் ஏழு ஆண்டு கால இருளுக்கு விடிவு</strong></p>
<p>உதகை, பிப்.3- அதிகார வர்க்கத்தின் மெத்த னப்போக்கும், ஏழு ஆண்டுகால காத்திருப்பும் ஒரு கிராமத்தின் பொறுமையை சோதித்தால் என்னவாகும் என்பதற்கு சாட்சி யாக அமைந்தது செட்டிபாளையத் தில் மார்க்சிஸ்ட் கட்சி நடத்திய போராட்டம். நீலகிரி மாவட்டம், நெல்லியா ளம் நகராட்சிக்குட்பட்ட 5ஆவது வார்டு செட்டிபாளையம் கிராம மக் களின் பிரதான கோரிக்கை ஒரு சாலை. கடந்த ஏழு ஆண்டுகளாக இக்கோரிக்கை காகித வடிவி லேயே நகராட்சி அலுவலகக் கோப்புகளில் தூங்கிக் கொண்டி ருந்தது. “அது தனியார் தோட்டம், தடையில்லாச் சான்றிதழ் (NOC) வாங்கி வாருங்கள்” என அதிகாரி கள் சாக்குப்போக்கு சொல்ல, அதையும் விடாது முயன்று கடந்த ஜனவரி 2-ம் தேதியே அதிகாரிக ளிடம் சமர்ப்பித்தனர் மக்கள். ஆனால், சான்றிதழ் கிடைத்தும் நக ராட்சி நிர்வாகம் அசைந்து கொடுக்கவில்லை. நிர்வாகத்தின் இந்த மெத்த னத்தை கண்டித்து, செவ்வா யன்று காலை மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையில் செட்டிபாளையம் கிராம மக்கள் திரண்டனர். பந்தலூர் ஏரியா கமிட்டி உறுப்பினர் மாறன் மற்றும் உப்பட்டி கிளைச் செயலா ளர் ராஜகோபால் தலைமை ஏற்ற னர். இதனைத்தொடர்ந்து பொது மக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ஆண்டுக்கணக்கில் கோரிக் கைகளை காகிதங்களாக மட்டுமே பார்த்து பழகிய நகராட்சி அதிகாரி களுக்கு, இந்த முற்றுகை போராட் டம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்போதே சாலையை போட வேண்டும். சாலை போடும்வரை யில் நாங்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம் என உறுதி யோடு நகராட்சி வாயிலை மறித்து அமர்ந்தனர். இதன்காரணமாக உள்ளே இருந்த அதிகாரிகள் யாரும் வெளியே வர முடியாத நிலையும், வெளியே இருந்த அதி காரிகள் உள்ளே செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டது. காலை தொடங்கிய போராட்டம் மதியம் 3 மணி வரை தளர்வின்றி நீடித்தது. “எங்கள் நிலத்தில் நாங்கள் நடப் பதே போராட்டமா?” என்றும், மக்க ளுக்கு வேலை செய்யாத நகராட்சி அலுவலகம் எதற்கு என்கிற பதாகையை வாயிலில் கட்டி உறுதி யோடு போராட்டத்தை தொடர்ந்த னர். வெற்றி வாகை சூடிய போராட்டம் மக்களின் உறுதியையும், கம்யூ னிஸ்ட் கட்சியினரின் ஆவேசத்தை யும் கண்டு பணிந்தது நகராட்சி நிர் வாகம். அடுத்த இரண்டு மாத காலத்திற்குள் சாலைப் பணிகள் முழுமையாக தொடங்கப்படும் என்று அதிகாரிகள் எழுத்துப் பூர்வமாக உறுதியளித்தனர். மேலும், உடனடியாக JCB இயந்தி ரம் கொண்டு வரப்பட்டு சாலை அமைப்பதற்கான முதற்கட்டப் பணிகள் உடனடியாக தொடங்கப் பட்டன. முன்னதாக இந்த போராட்டத் தில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.ஏ. குஞ்சு முகமது, மாவட்டக்குழு உறுப்பினர்கள் சி. மணிகண்டன், சுதர்சன், இராசி இரவிக்குமார், ஏரியா கமிட்டி செயலாளர் ரமேஷ், கிளைச் செயலாளர்கள் பெரியார் மணிகண்டன், கே.எம். சாஜி மற்றும் 5-வது வார்டு நகரமன்ற உறுப்பி னர் ஜாபீர் (அஇஅதிமுக) உள்ளிட் டோர் பங்கேற்று மக்களுக்கு ஆதர வாக நின்றனர். ஏழு ஆண்டுகால இழுத்தடிப் பிற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் தலை மையில் செட்டிபாளையம் மக்க ளின் உறுதி மிக்க போராட்டம் வெற்றிக்கு அருகில் கொண்டு சென்றுள்ளது.</p>
