முந்தய பக்கம்

நெல்லையில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

28 Oct 2026, 8:34 pm
நெல்லையில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
<p><strong>நெல்லையில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p><p>திருநெல்வேலி அக் 28-வரவுக்கும், செலவுக்குமான வித்தியாச தொகையை முழுமையாக அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு வழங்க வேண்டும். ஒப்பந்த நிலுவை தொகை வழங்கவேண்டும். ஓய்வூதியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் நெல்லையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடந்தது.வண்ணார்பேட்டை பொது மேலாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு போக்குவரத்து தொழிலாளர் சங்க மண்டல தலைவர் காமராஜ்தலைமை வகித்தார். சம்மேளன இணை செயலாளர் அழகர்சாமி துவக்கி வைத்துப் பேசினார்.</p><p>சிஐடியு மாவட்டச் செயலாளர் எல். சரவண பெருமாள், மாவட்டத் தலைவர் ஆர் முருகன், மாவட்ட நிர்வாகிகள் எஸ்.பெருமாள், கந்தசாமி, தங்கதுரை,சங்கிலிபூதத்தான் ஆகியோர் பேசினர். மண்டல பொதுச் செயலாளர் ஜோதி நிறைவுரையாற்றினார். துணைபொது செயலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram