நெல்லையில் அரசுப் போக்குவரத்துக் கழக கவன ஈர்ப்பு கோரிக்கை மாநாடு
23 Jul 2026, 10:53 pm
<p><strong>நெல்லையில் அரசுப் போக்குவரத்துக் கழக கவன ஈர்ப்பு கோரிக்கை மாநாடு</strong></p><p>திருநெல்வேலி, ஜூலை 23 - தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழி யர் சம்மேளனம் (சிஐடியு), அரசு போக்குவரத்து ஓய்வு பெற்ற ஊழியர் நல அமைப்புகளின் சம்மேள னம் (REWA) சார்பில் கவன ஈர்ப்பு கோரிக்கை மாநாடு அனைத்து மண்ட லங்களிலும் நடைபெறு கிறது. அதன்படி நெல்லையில் வியாழக்கிழமை மேலக்குல வணிகர்புரத்தில் கவன ஈர்ப்பு கோரிக்கை மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு சிஐடியு அரசு போக்கு வரத்து கழக சங்க மண்டல பொதுச் செயலாளர் எஸ். ஜோதி தலைமை வகித்தார். ரேவா மாநில நிர்வாகிகள் வெங்கடாசலம், பெருமாள், சுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு நாகர்கோவில் மண்டல பொதுச் செயலா ளர் சி.சுரேஷ் மாநாட்டை தொடங்கி வைத்து பேசி னார். மாநாட்டில் வரவுக்கும், செலவுக்குமான வித்தி யாசத் தொகைக்கு பட்ஜெட் டில் நிதி ஒதுக்க வேண்டும். கழகங்களின் கடனை அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும். காண்ட்ராக்ட் முறைக்கு முடிவு கட்டி காலிப் பணி யிடங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும். மின்சாரப் பேருந்துகளை கழகங்களே இயக்க வேண்டும். தனியா ருக்கு கொடுக்க கூடாது. பேருந்து பராமரிப்பை மேம் படுத்த அனைத்து மண்ட லங்களிலும் தொழில்நுட்ப பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும். ஒப்பந்த நிலுவைத் தொகை, அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். 1.4. 2003-க்குப் பின் பணியில் சேர்ந்தோருக்கு ஓய்வூதி யத்தை உறுதிப்படுத்த வேண்டும். உறுதிப்படுத்தும் வரை பணிஓய்வு பெற்ற வருக்கு இடைக்கால ஓய்வூ தியம் வழங்க வேண்டும். பதிவு செய்த அனைவருக் கும் வாரிசு வேலை வழங்க வேண்டும். ஓய்வுகாலப் பலன்களை உடனுக்குடன் வழங்க வேண்டும். ஜூன் மாதம் வரையிலான ஓய்வு கால பலனை உடனே வழங்க வேண்டும். ஓய்வூதியத்தில் ஒப்பந்த உயர்வு, அகவிலைப்படி நிலுவை, மருத்துவக் காப்பீடு, குறைந்தபட்ச ஓய்வூதிய உயர்வு உள்ளிட்ட ஓய்வூதி யர்களின் அனைத்து கோரிக் கைகளுக்கும் தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப் பட்டன. சிஐடியு சம்மேளன துணைத் தலைவர் பிச்சை நிறைவுரையாற்றினார். சங்க மாவட்ட பொருளாளர் சங்கிலி பூதத்தான் நன்றி கூறி னார். கோரிக்கை மாநாட்டில் திருநெல்வேலி, நாகர்கோ வில் மண்டல சம்மேளன உறுப்பினர்கள், அரசு போக்குவரத்து, அரசு விரைவு போக்குவரத்து, நாகர்கோவில் மண்டல நிர்வாகிகள் மற்றும் ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பி னர்கள் கலந்து கொண்ட னர்.</p>
