தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பணி நிரந்தரம், சம்பள உயர்வு கோரி நெல்லையில் தூய்மைப் பணியாளர்கள் 2 ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம்

6 Oct 2026, 9:40 pm
பணி நிரந்தரம், சம்பள உயர்வு கோரி நெல்லையில் தூய்மைப் பணியாளர்கள்  2 ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம்

பணி நிரந்தரம், சம்பள உயர்வு கோரி நெல்லையில் தூய்மைப் பணியாளர்கள் 2 ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம்

திருநெல்வேலி, அக். 6-பணி நிரந்தரம், சம்பள உயர்வுஉள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லையில் தூய்மை ப்பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்போராட்டத்தை துவக்கியுள்ளனர். இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக நெல்லை மாநகராட்சி அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமையன்று இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசின் அரசாணைப்படி தினசரி சம்பளமாக ரூ.762 வழங்க வேண்டும். அனைத்து தூய்மைப் பணியாளர்களுக்கும் காலை உணவுப்படியாக தலா ரூ.100 வழங்க வேண்டும். ​தொழிலாளர்களின் ஊதியத்தில் இருந்துபிடித்தம் செய்யப்பட்ட இபிஎப் தொகையை சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் உடனடியாக செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தூய்மை பணியாளர்கள் திங்கட்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

நெல்லை மாநகராட்சியில் செவ்வாய்க்கிழமையன்று 2வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் காலை 7 மணிக்கேமாநகராட்சி அலுவலகம் முன்பு திரண்டனர். ​தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தின் (சிஐடியு) மாவட்டதலைவர் ஆர்.மோகன் தலைமை வகித்தார்.சிஐடியு மாவட்டச் செயலாளர் எல்.சரவண பெருமாள், ஊரகவளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் மாரியப்பன்,தமுஎகச மாவட்டச் செயலாளர்எஸ்.வண்ணமுத்து மற்றும் பலர் போராட்டத்தை ஆதரித்துப்பேசினர்.இப்போராட்டத்தில் 300க்கும் மேற்பட்டதூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.