தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நெல்லை கவின் சாதி ஆணவக் கொலை வழக்கு காவல் உதவி ஆய்வாளருக்கு நிபந்தனை ஜாமீன்

11 Jun 2026, 9:43 pm
நெல்லை  கவின் சாதி ஆணவக் கொலை வழக்கு காவல் உதவி ஆய்வாளருக்கு நிபந்தனை ஜாமீன்

நெல்லை கவின் சாதி ஆணவக் கொலை வழக்கு காவல் உதவி ஆய்வாளருக்கு நிபந்தனை ஜாமீன்

மதுரை, ஜூன். 11 - நெல்லை மாவட்டத்தில் ஐடி பொறி யாளர் கவின் சாதி ஆணவக்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை யில் உள்ள காவல் உதவி ஆய்வா ளர் சரவணனுக்கு பல்வேறு நிபந்தனை களுடன் ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை வியாழக்கிழமை உத்தர விட்டது. நெல்லையைச் சேர்ந்த ஐடி பொறி யாளர் கவின் கொலை சாதி ஆணவ கொலை வழக்கில் கவின் காதலியின் தந்தையான காவல் உதவி ஆய்வாளர் சரவணன், தாய் கிருஷ்ணகுமாரி மற்றும் உறவினர் ஜெயபால் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு நெல்லை மாவட்ட வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கைது செய்யப்பட்ட சரவணன், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி நெல்லை மாவட்ட வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தி ருந்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப் பட்டதைத் தொடர்ந்து, அந்த உத்தரவை ரத்து செய்து ஜாமீன் வழங்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிசிஐடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சரவணனுக்கு ஜாமீன் வழங்கினால் வழக்கு விசாரணை பாதிக் கப்படுவதோடு, சாட்சிகளை கலைக்கும் வாய்ப்பு இருப்பதாக ஆட்சேபணை தெரி வித்தார். மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆனந்த், வழக்கு விசார ணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும், சாட்சிகளை கலைக்கும் எந்த முயற்சியிலும் ஈடுபட மாட்டோம் என்றும், நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளையும் ஏற்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி புகழேந்தி, மனுதாரர் சாட்சிகளை சந்திக்கவோ, சாட்சிகளைக் கலைக்கும் வகையில் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவோ கூடாது என்றும், மறு உத்தரவு வரும் வரை கோயம்புத்தூரில் தங்கி அங்குள்ள காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும், ரூ.1 லட்சம் மதிப்பில் பிணைப் பத்தி ரம் அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்து, சரவணனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.