காட்சிப்பொருளான குடிநீர் குழாய்கள் நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தி்ல் குடிநீரின்றி தவிக்கும் பயணிகள்
2 Jul 2026, 10:22 pm
<p><strong>காட்சிப்பொருளான குடிநீர் குழாய்கள் நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தி்ல் குடிநீரின்றி தவிக்கும் பயணிகள்</strong></p><p>திருநெல்வேலி, ஜூலை 2- நெல்லை சந்திப்பு பேரு ந்து நிலையம் நெல்லை மாநகரின் மையப்பகுதியில் உள்ளது.இங்கிருந்து தினமும் பல்வேறு வழித்த டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் மாந கர், புறநகர் பகுதிகளுக்கு சென்று வருகின்றன. புதிய பேருந்து நிலை யத்திலிருந்து தென்காசிக்கு இயக்கப்படும் பேருந்து களும் சந்திப்பு பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றன. இங்கு பேருந்து நிலையத்தை சுற்றி லும் வணிக வளாகங்கள் உள்ளிட்ட ஏராளமான கடை கள் இருப்பதால் கிராமப்புற ங்களில் இருந்தும் ஏராள மான தொழிலாளர்கள் பணிக்காக சந்திப்பு பேருந்து நிலையத்திற்கு வரு கின்றனர். இதன் அருகிலேயே சந்திப்பு ரயில் நிலையமும் இருப்பதால் அங்கிருந்து இறங்கி வரும் பயணிகளும் சந்திப்பு பேருந்து நிலை யத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கும் பேருந்தில் புறப்பட்டு செல்கின்றனர். ஆகையால் பேருந்து நிலை யம் எப்போதும் பரபரப்பாக காணப்படும் . கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.76 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப் பட்டது. தொடர்ந்து மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக் கப்பட்டது. இந்த பேருந்து நிலையத்தில் பயணிகளின் பயன்பாட்டிற்காக மொத்தம் 4 இடங்களில் குடிநீர் வசதி செய்து வைக்கப்பட்டி ருந்தது. ஆனால் அதில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களில் தண்ணீர் வராத நிலை தொடர்கிறது. பேருந்து நிலையம் திறந்தவுடன் சுமார் 2 மாதங்களுக்கு மட்டும் அதில் குடிநீர் வந்த நிலை யில் அதன் பின்னர் இது வரை குடிநீர் வரவில்லை. இதன் காரணமாக தினமும் பேருந்து நிலையத்திற்கு வரும் ஆயிரக்கணக்கான பயணிகள், முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தை கள் குடிநீர் இன்றி சிர மப்படுகின்றனர். குறிப்பாக கோடை காலம் மற்றும் வெப்பமான இந்த நாட்க ளில் குடிநீர் கிடைக்காதது பொ துமக்களின் உடல்நலத்திற் கும் பாதிப்பை ஏற்படுத்தும் சூழல் உருவாகியுள்ளது. எனவே இப்பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு, சந்திப்பு பேருந்து நிலை யத்தில் காட்சிப் பொருளாக இருக்கும் குடிநீர் இயந்தி ரங்களை பராமரிப்பு செய்து, கூடுதல் குழாய்கள் அமைத்து குடிநீர் வழங்க மாநகராட்சி நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் உடன டியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்களும், சமூக ஆர்வலர்க ளும் கோரிக்கை விடுத்துள் ளனர்.</p>
