தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நெல்லை மாநகரில் பாதாளச்சாக்கடைக்காக தோண்டப்பட்ட சாலைகளால் மக்கள் அவதி பள்ளங்களில் தேங்கிய மழைநீரால் விபத்து அபாயம்

6 Oct 2026, 9:44 pm
நெல்லை மாநகரில் பாதாளச்சாக்கடைக்காக தோண்டப்பட்ட சாலைகளால் மக்கள் அவதி பள்ளங்களில் தேங்கிய மழைநீரால் விபத்து அபாயம்

நெல்லை மாநகரில் பாதாளச்சாக்கடைக்காக தோண்டப்பட்ட சாலைகளால் மக்கள் அவதி பள்ளங்களில் தேங்கிய மழைநீரால் விபத்து அபாயம்

திருநெல்வேலி, அக்.6-நெல்லை மாநகராட்சிப் பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளால் முக்கிய சாலைகள் அனைத்தும் குண்டும் குழியுமாக மாறிவிட்டன. இந்நிலையில், தற்போது பெய்து வரும் தொடர் மழையால் சாலைகளில் தேங்கியுள்ள நீரும், பள்ளங்களும் விபத்து அபாயத்தை ஏற்படுத்தியுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

நெல்லை மாநகரப் பகுதியில் பொதுமக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகளுக்காக பல்வேறு பகுதிகளில் சாலைகள் தோண்டப்பட்டு, பல மாதங்களாகியும் முழுமையாக சீரமைக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

​ பாளையங்கோட்டை ,ரஹ்மத் நகர், நெல்லை டவுன், மேலப்பாளையம் மற்றும் தச்சநல்லூர் உள்ளிட்ட பல முக்கிய பகுதிகளில் பாதாளச் சாக்கடை குழாய்கள் பதிப்பதற்காக சாலைகள் தோண்டப்பட்டன.பணிகள் நிறைவடைந்த பின்னரும் கூட, சாலைகளை உடனடியாக மூடி தார்ச்சாலையாக மாற்றப்படாததே தற்போதைய அவல நிலைக்கு முக்கியக் காரணமாகும்.​தற்போது நெல்லைப் பகுதியில் பெய்து வரும் பருவமழையால் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது.

​குழி தோண்டப்பட்ட சாலைகளில் மழைநீர் தேங்குவதால், வாகன ஓட்டிகள் பள்ளங்களின் ஆழத்தை கணிக்க முடியாமல் தடுமாறுகின்றனர்.

இருசக்கர வாகன ஓட்டிகள் திடீரென பள்ளங்களில் சிக்கி நிலைதடுமாறி கீழே விழுவதும், காயமடைவதும் தினசரி நிகழ்வாக மாறி வருகிறது.சேறும் சகதியுமாக மாறிய சாலைகளில் வாகனங்கள் மெதுவாக செல்வதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

​அடிப்படை வசதி என்ற பெயரில் சாலைகளைச் சேதப்படுத்துவது வாடிக்கையாகிவிட்டது. மழைக் காலம் தொடங்குவதற்கு முன்பே இந்தச் சாலைகளைச் சீரமைத்திருக்க வேண்டும். தற்போது மழை பெய்யும்போது வெளியே செல்வதே அச்சமாக உள்ளது” என அப்பகுதி பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

சாலைகளை சீரமைத்திடுக

​எனவே, மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சி அதிகாரிகளும் உடனடியாகத் தலையிட்டு, ​போர்க்கால அடிப்படையில் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்க வேண்டும்.,மழைநீர் தேங்கும் இடங்களில் தற்காலிகத் தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.தரமற்ற முறையில் மேற்கொள்ளப்படும் பணிகளைத் தடுத்து, உரிய பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதே நெல்லை மாநகர மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாகும்.

மழைக்காலம் தீவிரமடைவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.