தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருச்சி விரைவு செய்திகள்

23 Mar 2026, 3:39 pm
திருச்சி விரைவு செய்திகள்

வியாபாரி வீட்டில் வைத்திருந்த 137 பவுன்  நகைகள் மாயம்

வேலை ஆட்களிடம் போலீசார் விசாரணை நாகர்கோவில். மார்ச் .23 - நாகர்கோவிலில் வியாபாரி வீட்டில் இரவு வைத்திருந்த 137 பவுன் தங்க நகை மாயமா னதாக வீட்டில் உரிமை யாளர் கொடுத்த புகாரின் பேரில் அந்த வீட்டில் வேலை  செய்யும் வேலை ஆட்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி வணிகர் தெருவில் உள்ள ஜெயசாந்தினி(60) என்பவர் வீட்டின் பிரோவில் இருந்த 137 பவுன் தங்க நகைகள் மாயமானது. இது குறித்து வடசேரி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் 2 பெண்கள் உட்பட வீட்டில் உள்ள 3 வேலையாட்கள் மீது புகார் அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து வேலையாட்களான சசிகுமார் அவரது மனைவி வசந்தி மற்றும் சுகுணா என மூன்று பேரையும் போலீசார் அழைத்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

மின்கம்பத்தில் இரு சக்கர வாகனம் மோதி காற்றாலை ஊழியர் பலி

நாகர்கோவில். மார்ச். 23- செண்பகராமன் புதூர் அருகே மின்கம்பத்தில் இரு  சக்கரம் வாகனம் மோதிய விபத்தில் காற்றாலை ஊழியர் உயிரிழந்தார். கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன் புதூரில் மின்கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதி காற்றாலை ஊழியர். சஞ்சய் (19) என்பவர் உயிரிழந்தார். இவர் தனது நண்பர் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு திரும்பிய போது விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இது குறித்த ஆரல்வாய் மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்னை மரம் ஏறும் போது தவறி விழுந்தவர் பலி

குழித்துறை, மார்ச் 23- மார்த்தாண்டத்தில் தென்னை மரம் ஏறும் போது தவறி விழுந்து தொழிலாளி பலியானார் உச்சக்கடை குளத்துறையை சேர்ந்தவர் ரமேஷ் 65 இவர் மார்த்தாண்டம் வடக்கு தெருவில் தென்னை மரம் ஏறியுள்ளார். எதிர்பாராத விதமாக இவர் தவறி விழுந்தார். உடனடியாக பாடசாலை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்  தனியார் மருத்துவமனையில்  மேல் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனில்லாமல்  பலியானார். இதுகுறித்து இவரது மனைவி லில்லி கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார்

6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் வங்கி ஊழியர் கைது திருநெல்வேலி, மார்ச் 23- நெல்லையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் வங்கி ஊழியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தாலுகா வன்னிமடை பகுதியைச் சேர்ந்த நடராஜனின் மகன் கணேச மூர்த்தி (45). நெல்லை வண்ணார் பேட்டை பரணி நகரில் வசித்து வரும் இவர், ஒரு தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் நெல்லை பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமியிடம் கடந்த 19ஆம்தேதி பாலி யல் தொல்லை கொடுத்து அத்துமீறி நடந்து கொண்டதாகக் கூறப்படு கிறது. இதில் பாதிக்கப்பட்ட அச்சிறுமி இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறினார். ஆத்திரமடைந்த பொதுமக்கள் சனியன்று கணேசமூர்த்தியை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல்  ஆய்வாளர் தலைமையிலான போலீசார், சிறுமியிடம் அத்துமீறிய கணேசமூர்த்தி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.

கண்டெய்னர் லாரியில் கொண்டு வரப்பட்ட ரூ. 8 கோடி வங்கி பணம் என்பது அறிந்து விடுவிப்பு

நாகர்கோவில். மார்ச். 23- தமிழக சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் 23-ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் தேர்தல்  நடத்தை விதிகள் தீவிரமாக அமல் படுத்தப்பட்டுள்ளன. வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் விநியோகிக்கப்படு வதைத் தடுக்க குமரி மாவட்டத்தின் முக்கிய சாலைகளில் 36 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் வாக னச் சோதனைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், ஞாயிறு இரவு நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பார்வதிபுரம் மேம்பாலம் அருகே பறக்கும் படை அதி காரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டி ருந்தனர்.  அப்போது அந்த வழியாக வந்த ஒரு கண்டெய்னர் லாரியை அதிகாரிகள் மறித்துச் சோதனை செய்தபோது, அதில் பெட்டி பெட்டியாக 20 ரூபாய் நாண யங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சிய டைந்தனர். லாரியில் மொத்தம் 8 கோடி ரூபாய் ரொக்கம் இருந்தது கண்டறி யப்பட்டது. இதுகுறித்து லாரி ஓட்டுநர் மற்றும் ஊழியர்களிடம் அதிகாரிகள் நடத்திய தீவிர விசாரணையில், அந்தப் பணம் இந்திய ரிசர்வ் வங்கியிலிருந்து கேரள மாநில வங்கிப் பரிமாற்றத்திற்காகக் கொண்டு செல்லப்படுவது தெரிய வந்தது. வங்கித் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து ஆவணங்களும் முறையாகவும், சட்ட பூர்வமாகவும் இருந்ததை உறுதி செய்த தேர்தல் அதிகாரிகள், அந்த வாகனத்தைத் தொடர்ந்து செல்ல அனுமதித்தனர். நள்ளிரவில் கண்டெய்னர் லாரியில் பல கோடி ரூபாய் பிடிபட்டதாகத் தகவல் பரவியதால் பார்வதிபுரம் பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்புநிலவியது.

நெல்லை கல்லூரி மாணவி தற்கொலை  மின் விசிறியில் தூக்கில் தொங்கினார்

திருநெல்வேலி, மார்ச் 23- நெல்லை டவுணை அடுத்த பழைய பேட்டை அருகே உள்ள கிருஷ்ணபேரி 5 பகுதியை சேர்ந்தவர் தர்மராஜா. இவர் பிளம்பிங் மற்றும் எலக்ட்ரிக்கல் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் ராமலட்சுமி (18). இவர் திடியூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் ராமலட்சுமி சரியாக படிக்காமல் செல்போனை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இதனால் அவர்களிடம் கோபித்துக்கொண்டு ஞாயிறன்று இரவு ராமலட்சுமி தனது அறைக்குள் தூங்க சென்றார். தொடர்ந்து அவர் மின்விசிறி கொக்கியில் சேலையை கட்டி தூக்குப் போட்டு கொண்டார். இதனிடையே திங்கட்கிழமை காலை  அவரது அறைக்கதவு வெகுநேரமாகியும் திறக்கப்படாத தால் அவரது பெற்றோர் சத்தம் போட்டுள்ளனர். ஆனால் ராமலட்சுமி யிடம் இருந்து திரும்ப பதில் வராததால் சந்தேகம் அடைந்து ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தனர். இதில் ராமலட்சுமி தூக்கில் தொங்குவதை பார்த்து கூச்சலிட்டனர், அவர்களது சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்து கதவை உடை த்து உள்ளே சென்று ராமலட்சுமியை மீட்டனர். அப்போது ஏற்கனவே ராமலட்சுமி இறந்தது விட்டது தெரிய வந்த தால் உடனடியாக பேட்டை போலீசாருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறை யினர் ராமலட்சுமி உடலை கூராய்வுக்காக பாளை. அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்தி விசாரணை வருகின்றனர்.

பாலியல் வன்கொடுமைகளை தடுத்திடுக! மாதர் சங்க பேரவை கோரிக்கை

தென்காசி ,மார்ச் 23- தமிழ்நாடு முழுவதும் பெண்கள், குழந்தை மீது தொடரும் பாலியல் வன் முறை மற்றும் கொலைக ளை செய்துவரும் சமூக விரோத கும்பல்கள் மீது  கடுமையான நடவடிக்கை எடுக்க கோரி, அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங் கத்தின் வாசுதேவநல்லூர் ஒன்றிய பேரவைக்கூட்டத் தில் வலியுறுத்தப்பட்டது.  சிவகிரியில் நடந்த ஜன நாயக மாதர் சங்கத்தின் பேர வைக் கூட்டத்திற்கு பிச்சை மணி தலைமை தாங்கி னார். முத்துலட்சுமி வர வேற்றார். தென்காசி மாவட்டச் செயலாளர் ஆயி ஷா பேகம், மாநில துணைச் செயலாளர் பி.கற்பகம் ஆகி யோர் பேசினர். வாசுதேவ நல்லூர் ஒன்றியக்குழுவின் தலைவராக .சே.புஷ்பம், செயலாளராக மா.சுப்பு லட்சுமி, பொருளாளராக க. மகேஸ்வரி மற்றும் நிர்வாகி கள், ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் தேர்வு செய்யப் பட்டனர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சார்ந்த மாணவி வன்கொடுமை செய்து கொலை செய்யப் பட்டதற்கு நியாயமான விசா ரணை நடத்தி நீதி வழங்க வேண்டுமெனவும், ஈரான் மீது இஸ்ரேல் – அமெரிக்க போரினால் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வினை போக்கவும், பதுக்கலை தடுக்கவும் ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப் பட்டன.

நாங்குநேரி அருகே கொலை செய்யப்பட்ட விவசாயி உடலை வாங்க 7ஆவது நாளாக உறவினர்கள் மறுப்பு குற்றவாளிகளை பிடிக்க 14 தனிப்படைகள் அமைப்பு

திருநெல்வேலி,மார்ச் 23- நாங்குநேரி அருகே உள்ள வடக்கு நெல்லையப்ப புரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். விவசாயி. இவரை கடந்த 17-ஆம் தேதி காலை தோட்டத்திற்கு செல்லும் வழி யில் மர்ம கும்பல் இரும்பு ஆயு தங்களால் கொடூரமாக தாக்கி  கொலை செய்தது.  இதுகுறித்து மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்., சம்ப வம் நடந்த இடத்தில் இருந்து பல கிலோ மீட்டர் சுற்றளவில் வயல்களும், வயல் சார்ந்த இடங்களும் மட்டுமே உள்ள தால், அப்பகுதியில் கண்கா ணிப்பு காமிராக்கள் எதுவும் இல்லை.  மேலும் சம்பவ இடத்தில் குறிப்பிடத் தகுந்த தடயங்கள் எதுவும் போலீசாருக்கு கிடை க்கவில்லை. இதனால் கொ லையாளிகளை பிடிக்க முடி யாமல் கடந்த 6. -நாட்களாக திணறி வந்தனர். இந்நிலை யில் இடப் பிரச்சனையில் அதே ஊரை சேர்ந்த ‘சில ருக்கு ஆறுமுகத்துடன் முன் விரோதம் இருந்தது. அதன் காரணமாக அவர்கள் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் 3 பேரை  பிடித்து கடந்த 3 நாட்களாக போலீசார் விசாரித்து வரு கின்றனர். ஆனாலும் இந்த வழக்கில் கொலையாளிகள் குறித்த முழுமையான தகவல் கிடைக்கவில்லை. இதனிடையே கொலை சம்பவத்தில் கொலையாளி கள் உறுதிபட கைது செய்யாத நிலையில், தந்தை இறந்த துக்கத்தில் ஆறுமுகத்தின் மகள் பேபி கனி(23) ஞாயிற் றுக்கிழமை அன்று விரக்தியில் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவர் தனது கையில் தனது தந் தையையும் தன்னையும் அடக்கம் செய்யுங்கள் என உருக்கமாக எழுதி வைத்துள் ளார். மேலும் அவர் எழுதிய தற்கொலை கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர். அதில், தனது உறவினர் தான் இந்த கொலைக்கு காரணம் என்றும், தனது அப்பாவை கொன்ற வர்களை விரைவாக கைது செய்ய வேண்டும் என்றும், தந்தையின் பிரிவை தாங்கிக் கொள்ள முடியாத தால் அவரிடமே செல்வதாக வும் உருக்கமாக எழுதி இருப்ப தாக போலீசார் தெரிவித்தனர். இந்த நிலையில் ஆறு முகம் கொலை சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத் தில் மாவட்ட போலீஸ் எஸ் பி பிரசன்ன குமார் உத்தர வின்பேரில் 14 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையா ளிகளை தேடி வருகின்றனர். இதற்கிடையே ஆறுமுகம் கொலைசெய்யப்பட்டு திங்கட் கிழமையோடு 7-வதுநாள் ஆகிவிட்ட நிலையில் உடலை அவரது உறவினர்கள் வாங்க மறுத்து விட்டதால் மூன்றடைப்பு, மூலைக் கரைப்பட்டி பகுதிகளில் போலீசார் அதிகஅளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நள்ளிரவில் புகையை  வெளியேற்றும் தொழிற்சாலைகள் தூத்துக்குடியில் பொதுமக்கள் கடும் அவதி

தூத்துக்குடி, மார்ச் 23- தூத்துக்குடியில் நள்ளிரவில் தொழிற் சாலைகள் வெளியேற்றும் புகை காரணமாக பொது மக்கள் அவதியுற்று வருகின்றனர். துறைமுக நகரான தூத்துக்குடியில் பல்வேறு தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக தொழிற் சாலைகளில் இருந்து  நள்ளிரவில் அதிகளவில் புகை வெளியேற்றப் படுவதாக புகார் எழுந் துள்ளது. குறிப்பாக நகரின் மேற்கு பகுதிக ளான கோரம்பள்ளம், இபி காலனி, மாதவன் நகர், மடத்தூர், சோரீஸ் புரம், பி அன் டி காலனி, திரவிய ரத்ன நகர், கதிர்வேல் நகர், அசோக் நகர், பாக்கியலட்சுமி நகர், பால்பாண்டி நகர்,  மில்லர்புரம், அண்ணா நகர், டிஎம்பி காலனி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் மூச்சுத் தினறால் பாதிக்கப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனர். குழந்தைகள், முதியவர்களுக்கு சுவாச பிரச்சினை, கண் எரிச்சல் உள்ளிட்டவை ஏற்படுகிறது. தொடர்ந்து வெளியேறும் புகையினால் சுற்றுச்சூழ லும் பாதிக்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் புகையை வெளியேற்றும் தொழிற்சாலைகள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ரூ.42.61 லட்சம் பணம், ரூ.30,593 மதிப்பிலான மதுபானங்கள் பறிமுதல்

தூத்துக்குடி, மார்ச் 23- தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினரால் இதுவரை ரூ.42.61 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான க.இளம்பகவத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனை கண்காணிப்பதற்காக பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மார்ச் 23 திங்கள் வரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 42,61,355 ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், உரிய ஆவணங்கள் இல்லாத ரூ. 2,20,280 மதிப்பிலான இலவசப் பொருட்கள் மற்றும் ரூ. 30,593 மதிப்பிலான மதுபானங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் கண்காணிப்புப் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

நெல்லை கல்லூரி மாணவி தற்கொலை  மின் விசிறியில் தூக்கில் தொங்கினார்

திருநெல்வேலி, மார்ச் 23- நெல்லை டவுணை அடுத்த பழைய பேட்டை அருகே உள்ள கிருஷ்ணபேரி 5 பகுதியை சேர்ந்தவர் தர்மராஜா. இவர் பிளம்பிங் மற்றும் எலக்ட்ரிக்கல் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் ராமலட்சுமி (18). இவர் திடியூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் ராமலட்சுமி சரியாக படிக்காமல் செல்போனை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இதனால் அவர்களிடம் கோபித்துக்கொண்டு ஞாயிறன்று இரவு ராமலட்சுமி தனது அறைக்குள் தூங்க சென்றார். தொடர்ந்து அவர் மின்விசிறி கொக்கியில் சேலையை கட்டி தூக்குப் போட்டு கொண்டார். இதனிடையே திங்கட்கிழமை காலை  அவரது அறைக்கதவு வெகுநேரமாகியும் திறக்கப்படாத தால் அவரது பெற்றோர் சத்தம் போட்டுள்ளனர். ஆனால் ராமலட்சுமி யிடம் இருந்து திரும்ப பதில் வராததால் சந்தேகம் அடைந்து ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தனர். இதில் ராமலட்சுமி தூக்கில் தொங்குவதை பார்த்து கூச்சலிட்டனர், அவர்களது சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்து கதவை உடை த்து உள்ளே சென்று ராமலட்சுமியை மீட்டனர். அப்போது ஏற்கனவே ராமலட்சுமி இறந்தது விட்டது தெரிய வந்த தால் உடனடியாக பேட்டை போலீசாருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறை யினர் ராமலட்சுமி உடலை கூராய்வுக்காக பாளை. அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்தி விசாரணை வருகின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.