முந்தய பக்கம்

நெல்லையில் 3 சிறுமிகள் வன்கொடுமை - குற்றவாளிக்கு தூக்கு தண்டனை உறுதி!

10 hours before
நெல்லையில் 3 சிறுமிகள் வன்கொடுமை - குற்றவாளிக்கு தூக்கு தண்டனை உறுதி!

நெல்லையில் 3 சிறுமிகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த ஆனந்த சேகருக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மேலப்பாளையத்தில் 2023-ம் ஆண்டு 3 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து ஆனந்த சேகர் என்பவரை கைது செய்திருந்தனர். இந்த வழக்கு விசாரணை திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட ஆனந்த சேகருக்கு மரண தண்டனை விதித்து கடந்த மார்ச் மாதம் தீர்ப்பு வழங்கியது. மேலும், பாதிக்கப்பட்ட 3 சிறுமிகளுக்கும் தலா ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த தீர்ப்பு மீதான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தூக்கு தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram