தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நாட்டுப்புறப் பாடகியின் நாட்டு நலன்

16 May 2026, 8:04 pm
நாட்டுப்புறப் பாடகியின் நாட்டு நலன்

நாட்டுப்புறப் பாடகியின் நாட்டு நலன்

உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை. உன் வேலைய மட்டும் பாரு. என் ஊரு பிரச்சனையில் எல்லாம் ஏன் தலையிடுற என்ற கேள்விகள் பலதும் எதிர்கொண்டிருப்போம்.

குறிப்பாக மக்களின் பிரச்சனைகளை உணர்ந்து அதிகாரத்தை நோக்கி கேள்வி எழுப்பும் ஒவ்வொரு நபரும் தனது குடும்பம், நண்பர்கள், சுற்றத்தார் மத்தியில் இருந்து இந்த கேள்வியை எதிர்கொள்வார்கள்.

அப்படித்தான் நேஹா சிங் ரத்தோருக்கும் அவரது நண்பர்கள் கேள்வி எழுப்பினார்கள். கேள்வி மட்டுமல்ல.

நீ பெரிய ஆபத்தில் சிக்கிக்கொள்வாய், பத்திரிகையாளர் கௌரி லங்கேஷுக்கு நடந்தது போல சுட்டுக் கொலை செய்யப்பட்டு விடுவாய் எனவும் எச்சரித்துள்ளார்கள்.

அவர்கள் எச்சரித்தது போல ஒன்று ரெண்டல்ல பல நெருக்கடிகளை சந்தித்தாலும் அவற்றை தைரியமான ஏந்திக்கொண்டு ஊர் பிரச்சனைகளை கைவிடாமல் கேள்விகள் எழுப்பிகொண்டுள்ளார் நேஹா.

தற்போது கூட “மணிப்பூரைக் காப்பாற்ற முடியாத” ஒரு அரசு நிர்வாகம் எப்படி மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க முடியும் என கேள்வினார்.

கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைக் கவனிக்காமல், தேர்தல்களிலும் அரசியலிலும் நேரத்தைச் செலவிடும் பாஜக அரசையும் அவர் விமர்சித்துள்ளார்.

போராட்டங்கள் நடத்துவதும், தேர்வுத் தாள் தகவல் கசிவுக்கு எதிராக அரசிடம் கேள்வி எழுப்புவதன் காரணமாக, மாணவர்களை “தேச விரோதிகள்” என்று முத்திரை குத்திவிடக் கூடாது.

மாணவர்கள் அச்சமின்றிப் அரசை நோக்கி கேள்வி எழுப்பிக் வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

யார் இந்த நேஹா?

பீகார் மாநிலத்தை சேர்ந்தவரான நேஹா சிங் ரத்தோர் 23 வயது இளம் பாடகி.

பீகார்-உத்தரப்பிரதேச எல்லையில் உள்ள ஜந்தாஹா என்ற சிறிய கிராமத்தில் வசிக்கும் நேஹா கான்பூரில் பி.எஸ்சி முடித்தார்.

2019-இல் இருந்து நாட்டுப்புற பாடல்கள் பாடி வரும் இவர் கொரோனா காலத்தில் யூடியூயூபில் ‘தரோஹர்’ (Dharohar) என்ற சேனல் துவங்கி பாடல்களை வெளியிடத் துவங்கினார்.

ஒன்றிய மற்றும் மாநில அரசுகளை விமர்சித்து இவர் பாடும் போஜ்புரி நாட்டுப்புறப் பாடல்கள் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

2023 ஆம் ஆண்டு பாஜக ஆர்எஸ்எஸ் தொடர்புடைய பிரவேஷ் சுக்லா என்பவன் பழங்குடியினத்தை சேர்ந்த ஒருவர் மீது சிறுநீர் கழித்து கொடுமை செய்தது தொடர்பாக ஆர்எஸ்எஸ் அமைப்பை விமர்சிக்கும் கார்ட்டூன் ஒன்றை சமூக ஊடகத்தில் பகிர்ந்து நேஹா விமர்சித்தார்.

இதற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அதேபோல பஹல்காம் தாக்குதலுக்கு காரணம் பாஜக தலைமையிலான ஒன்றிய அரசின் உளவு மற்றும் பாதுகாப்புத் துறையின் தோல்வி தான் கூறியிருந்த காணொலி ஒன்றை சமூக ஊடகங்களில் வெளியிட்டதற்காகவும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

ஆதித்யநாத் தலைமையிலான ஆட்சியில் உத்தரபிரதேச மாநிலத்தில் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் இஸ்லாமியர்களின் வீடுகள் இடிக்கப்பட்டு வருகின்றன. அ

வ்வாறு 2023 ஆம் ஆண்டு கான்பூர் தேஹத் மாவட்டத்தில் வீடுகள் இடிக்கப்பட்ட போது இரண்டு பெண்கள் தீக்குளித்தனர்.

இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டும் ஆதித்யநாத்தைவிமர்சித்தும் நாட்டுப்புறப் பாடலைப் பாடி ரத்தோர் பகிர்ந்திருந்தார்.

இதனைக்கண்டு ஆத்திரமடைந்த அரசு அவர் மீது வழக்குப்பதிவு செய்தது.

ஆனால் எந்த ஒரு பொய் வழக்காலும், மிரட்டல்களாலும் நேஹா சிங்கின் போராட்டக்குரலை ஒடுக்க முடியவில்லை.

இதுகுறித்து கேள்வி எழுப்பியதற்கு, “அரசாங்கத்தைக் கேள்வி கேட்கும் உரிமையை நமது ஜனநாயகம் நமக்கு வழங்குகிறது.

நான் அதையே செய்கிறேன்” என நேஹா சொல்கிறார்

பாடல்களில் வெளிப்படும் கிளர்ச்சி

நேஹா சிங் ரத்தோரின் மக்கள் பிரச்சனைகள் பற்றிய பாடல்களின் ஒவ்வொரு வரிகளிலும் கிராமத்துக் காற்றும், கிளர்ச்சியும் பிணைந்து இருக்கின்றன.

“வேலை தருவீர்களா அல்லது நாடகமாடுவீர்களா? இந்த அதிகார நாற்காலி ஒன்றும் உங்கள் அப்பாவிடம் இருந்து உங்களுக்கு வந்த சொத்து அல்ல” என வேலையின்மைக்கு எதிராக அவர் அதிகாரத்தில் உள்ளவர்களைச் கடுமையாகச் சாடி பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

“அவர்கள் நல்ல காலம் வரும் என்றார்கள், ஆனால் இப்போது நம் கையில் பிச்சை பாத்திரத்தைத் தான் கொடுத்துள்ளார்கள்” என்று பாஜக அரசின் அச்சே தின் (நல்ல காலம் வரும்) என்ற வாக்குறுதியைக் கேலி செய்து ஒரு பாடல் பாடியுள்ளார்.

கடந்த பல ஆண்டுகளாக கேவலமான அரசியல் நகர்வுகள் மூலம் நிதிஷ் குமார் முதல்வர் பதவியில் நீடித்திருந்தார்.

அம்மாநில மக்கள் கடும் வறுமையில் உள்ளனர். ஆனாலும் நல்ல ஆட்சியை நான் கொடுத்துள்ளேன் என அவர் பேசியதை கடுமையாக விமர்சித்தும் வேலையில்லாததால் பீகார் மக்கள் புலம்பெயர்ந்து வேலை தேடி வளைகுடா நாடுகளுக்குச் செல்வதையும் சுட்டிக்காட்டி பாடல்கள் பாடினார்.

அதேபோல், ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் குறிப்பிட்டு, இது தான நீங்கள் சொன்ன ராமராஜ்ஜியமா என யோகி அரசை கடுமையாக விமர்சித்தும் கேலி கிண்டல் செய்தும் பாடியுள்ளார்.

இப்படி பாஜக ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட அமைப்புகளையும் அதன் தலைவர்களையும் கடுமையாக விமர்சித்து வரும் இவரை பாஜக வினர் ‘தேச விரோதி’ ‘துரோகி’ என்றும் சமூக ஊடகங்களில் வசைபாடுகின்றனர்.

பலர் மிரட்டல்களையும் விடுத்துள்ளனர். துவக்கத்தில் இந்த மிரட்டல்களை கண்டு பயந்த குடும்பத்தினர், தற்போது போராட்டக்குரலுக்கு ஆதரவு அளிக்கின்றனர். இசை ரீதியாக எந்தப் பயிற்சியும் பெறாத ரத்தோர், தனது தாயையே தனது முன்மாதிரியாகக் கருதுகிறார்.

போஜ்புரி இசையில் மலிவான மற்றும் ஆபாசமான கருத்துக்கள் நிறைந்துள்ள நிலையில், அதன் பெருமையை மீட்டெடுக்க இவர் விரும்புகிறார். சுமார் 5.1 கோடி மக்கள் பேசும் போஜ்புரி மொழியின் இலக்கியப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதே தனது லட்சியம் என ரத்தோர் கூறுகிறார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.