தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பேச்சுவார்த்தை தோல்வி! அண்ணாமலை பல்கலை.யில் போராட்டம் தீவிரம்

6 Mar 2026, 3:17 pm
பேச்சுவார்த்தை தோல்வி! அண்ணாமலை பல்கலை.யில் போராட்டம் தீவிரம்
<p><strong>பேச்சுவார்த்தை தோல்வி! அண்ணாமலை பல்கலை.யில் போராட்டம் தீவிரம்</strong></p> <p>சிதம்பரம், மார்ச் 6- தமிழக அரசுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் தோல்வி அடைந்ததால், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் தங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர் மற்றும் ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியு றுத்திக் கடந்த 22 நாட்களாகப் போராட்டம் நடைபெற்று வருகிறது. 15 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவை யில் உள்ள பதவி உயர்வுகள், பணப் பயன்கள், ஓய்வூதியத் தொகை மற்றும் தொகுப்பு ஊதியர்களைப் பணி நிரந்தரம் செய்தல் போன்ற கோரிக்கைகளுக்குத் தமிழக அரசு இதுவரை சரியான நட வடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், பல்கலைக்கழகத்தில் உள்ள 2000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தினர். இனிமேல் பணிக்குச் செல்லாமல் போராட்டத்தைத் தொடரப்போவதாகவும் அறிவித்துள்ளனர். இப்போராட்டத்திற்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ் பாபு, ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் மல்லிகா, சிஐடியு மாவட்ட நிர்வாகி சங்கமேஸ்வரன், ஓய்வூதிய சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு மாவட்ட நிர்வாகி கலியமூர்த்தி, விசிக மாவட்டச் செயலாளர்கள் மணவாளன், தமிழ் வளவன், மாவட்டச் செய்தித் தொடர்பாளர் சரித்திரன், அதிமுக மாவட்ட அவைத் தலைவர் குமார், நகரச் செய லாளர் செந்தில்குமார், காங்கிரஸ் மாவட்ட நிர்வாகி ராஜா சம்பத் குமார், மதிமுக பார்த்திபன் உள்ளிட்ட அனைத்துக் கட்சி களைச் சார்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு உரையாற்றினர். கோரிக்கை கள் நிறைவேற்றப்படாவிட்டால் சிதம்பரம் நகரம் முழுவதும் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.