தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அரசியல் கட்சிகளின் சின்னங்கள் அழிப்பதில் அலட்சியம்

16 Mar 2026, 4:46 pm
அரசியல் கட்சிகளின் சின்னங்கள் அழிப்பதில் அலட்சியம்
<p><strong>அரசியல் கட்சிகளின் சின்னங்கள் அழிப்பதில் அலட்சியம்</strong></p> <p>அவிநாசி, மார்ச் 16- தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்துள்ள நிலையில், &nbsp;அவிநாசியில் பல இடங்களில் &nbsp;அரசியல் கட்சிகளின் சின்னங் கள் முழுமையாக அழிக்கப்பாமல் உள்ளது. நெடுஞ்சாலைத் &nbsp;துறையினர் அலட்சியத்துடன் செயல்படுவதாக மார்க்சிஸ்ட் &nbsp;கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி &nbsp;நடைபெற உள்ளது. இதையொட்டி மார்ச் 15 இரவு முதல் &nbsp;நடத்தை விதிகள் அமுலாகியுள்ளது. இதைதொடர்ந்து பொது &nbsp;இடங்களில் அரசியல் கட்சியின் சின்னங்கள், தலைவர்க ளின் சிலைகள் உள்ளிட்டவைகள் மறைக்கப்படும். இந்நிலை யில் அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிமுக, தவெக &nbsp;உள்ளிட்ட கட்சிகளின் சின்னங்கள் முழுமையாக அழிக்கப்ப டாமல் உள்ளன. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அவிநாசி ஒன்றியச் செயலாளர் அ.ஈஸ்வரமூர்த்தி நெடுஞ் சாலைத் துறை பொறியாளர் தரணிதரனிடம் புகார் தெரி வித்தும், நெடுஞ்சாலைத்துறை அலட்சியமாக செயல்படு கிறது. &nbsp;குறிப்பாக அவிநாசி தேசிய நெடுஞ்சாலை கால்நடை மருத்துவமனை அருகில் பாலத்தில் வரையப்பட்ட விசில் &nbsp;சின்னம் சரிவர அழிக்காமல், பெயரளவில் மட்டும் வெள்ளை &nbsp;வர்ணம் அடிக்கப்பட்டுள்ளது. அதேபோல மங்கலம் சாலை &nbsp;பைபாஸ் பாலத்தின் இரண்டு புறங்களிலும் விசில் சின்னம் வரையப்பட்டு அளிக்கப்படாமல் உள்ளது. பைபாஸ் சாலை யிலிருந்து ரவுண்டானா பகுதி பாலத்தில் விசில் சின்னம் &nbsp;வரையப்பட்டுள்ளது. ராயன் கோவில் செல்லும் நுழைவாயில் &nbsp;அருகே இருபுற சுவர்களிலும் இரட்டை இலை சின்னம் வரை யப்பட்டுள்ளது. இந்த இடங்களில் எல்லாம் தற்போது வரை &nbsp;சின்னங்கள் அழிக்கப்படாமல் உள்ளன. அதேபோல் தனி யாருக்கு சொந்தமான இடங்களில் தேர்தல் ஆணையத்தில் அனுமதி கடிதம் ஒப்படைத்த பிறகே சின்னம் வரைய வேண்டும் என்ற நடைமுறை கடைபிடிக்கப்பட்டுள்ளதா ? என &nbsp;மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கேள்வி எழுப்பியுள் ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.