தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சாமானியர்களுக்கான பொருளாதார உரிமைகள் புறக்கணிப்பு

17 Feb 2026, 3:36 pm
சாமானியர்களுக்கான பொருளாதார உரிமைகள் புறக்கணிப்பு
<p><strong>சாமானியர்களுக்கான பொருளாதார உரிமைகள் புறக்கணிப்பு</strong></p> <p>கோவை, பிப்.17- ஆட்சியாளர்களின் நிதிநிலை அறிக்கையில் சாமானியர்களுக் கான பொருளாதார உரிமைகள் புறக்கணிப்பப்படுவதாக கோவை யில் எம்எஸ்எம்இ சார்பில் திங்க ளன்று நடைபெற்ற கருத்தரங்கில் &nbsp;விமர்சிக்கப்பட்டுள்ளது. கோவை எம்எஸ்எம்இ அசோசி யேசன் சார்பில் சிறு, குறு நிறுவ னங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் ஒன்றிய பட்ஜெட் குறித்த சிறப்பு கருத்தரங்கம் பீளமேட்டில் உள்ள கோ இந்தியா கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சங்கத் தலைவர் தி.மணி தலைமை வகித்தார். செயலாளர் கி.பாண்டி யன் வரவேற்றார். இதில், &ldquo;2026-2027 பட்ஜெட்- நெருக்கடியும், தீர்வும்&rdquo; என்ற தலைப்பில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க துணைத் தலைவர் ஜி.ஆனந் தன், வங்கி சேவையை சிறப்பாக பயன்படுத்துவது எப்படி? என்ற &nbsp;தலைப்பில் மேனாள் முன்னோடி வங்கி மேலாளர் ஆர். நந்தகோ பால், &ldquo; இன்றைய கால கட்டத்தில் &ldquo;சிறு, குறு நிறுவனங்கள் எதிர் கொள்ளும் சவால்கள்&rdquo; குறித்து கோயமுத்தூர் கம்பரசர் இண்டஸ்ட் ரீஸ் அசோசியேசன் தலைவர் எம். ரவீந்திரன் ஆகியோர் உரையாற்றி னர். இதில் ஜி.ஆனந்தன் பேசுகை யில், &ldquo;இந்திய அரசமைப்புச் சட்டத் தில் அரசியல் உரிமைகள் அடிப் படை உரிமைகளாக உள்ள நிலை யில், பொருளாதார உரிமைகள் இன் னும் வழிகாட்டு நெறிமுறைகளா கவே உள்ளன. இதுவே பட்ஜெட் விவாதங்களில் சாமானியர்களின் தேவைகள் புறக்கணிக்கப்பட கார ணமாகிறது. தற்போதைய பட் ஜெட்டில் ஜிஎஸ்டி மற்றும் வரு மான வரி மூலம் சாமானியர்களிடம் அதிக வரி வசூலிக்கும் அரசு, கார்ப் பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலு கைகளை வாரி வழங்குகிறது. நாட் டின் ஒரு சதவீத செல்வந்தர்களி டம் 40 சதவீத சொத்துக்கள் குவிந் துள்ள நிலையில், வேலையில்லா திண்டாட்டம் 17 சதவீதமாக உயர்ந் துள்ளது கவலைக்குரியது. விவசாயத் துறைக்கு சீனா போன்ற நாடுகள் ஒதுக்கும் நிதியில் &nbsp;பாதியைக்கூட இந்தியா ஒதுக்க வில்லை. மேலும், சிறு தொழில்க ளுக்கான வங்கி கடன் 40 சதவீதத் திலிருந்து 22 சதவீதமாக குறைந் துள்ளது. 32 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் எம்எஸ்எம்இ துறைக்கு வெறும் ரூ.10,000 கோடி &nbsp;மட்டும் ஒதுக்கிவிட்டு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பல லட்சம் &nbsp;கோடிகளை அரசு மடைமாற்றுகி றது. சாமானியர்களின் வாங்கும் சக்தியை உயர்த்தினால் மட்டுமே வேலைவாய்ப்பும், பொருளாதார வளர்ச்சியும் உருவாகும்&rdquo; என் றார். முன்னதாக, இக்கருத்தரங்கில், சிறு குறு தொழில் நிறுவனங்களுக் கான மூலப்பொருளின் விலையை அரசு கட்டுப்படுத்த வேண்டும். அமெரிக்கா மற்றும் இந்தியாவிற்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தம் நமது நாட்டிற்கு பாதகமானது. நாட் டின் மக்களின் நலன்களுக்கு எதி ரான இந்த வர்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. முடிவில், எஸ்.சக்திவேல் நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.