முந்தய பக்கம்

நாடு முழுவதும் நாளை நீட் மறுதேர்வு - மாணவர்கள் கவனத்திற்கு!

20 Jun 2026, 3:45 pm
நாடு முழுவதும் நாளை நீட் மறுதேர்வு - மாணவர்கள் கவனத்திற்கு!

நாடு முழுவதும் நீட் (NEET) இளநிலை மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான மறுதேர்வு நாளை நடைபெற உள்ளது.

கடந்த மே 3 அன்று நடத்தப்பட்ட நீட் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்ததையடுத்து, தேர்வானது ரத்து செய்யப்பட்டது. மேலும் ஜூன்22 அன்று நீட் மறுதேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது.

அதன்படி நாடு முழுவதும் நாளை மதியம் 2 மணிக்கு தேர்வு தொடங்கும் என தேசிய தேர்வு முகமை (NTA) தெரிவித்துள்ளது.

மதியம் 2 மணிக்கு தேர்வு தொடங்கும் நிலையில், காலை 11 மணி முதல் மதியம் 1.30 மணிவரை தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

எனவே, தேர்வர்கள் முன்கூட்டியே தேர்வு மையத்திற்கு வந்து, நுழைவுச் சீட்டு (Admit Card), செல்லுபடியாகும் அடையாள அட்டை மற்றும் தேவையான ஆவணங்களை உடன் கொண்டு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram