தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பலியாகும் மருத்துவக் கனவுகள்: 37 நாட்களில் 13 தற்கொலைகள்!

20 Jun 2026, 11:42 pm
பலியாகும் மருத்துவக் கனவுகள்:  37 நாட்களில் 13 தற்கொலைகள்!

பலியாகும் மருத்துவக் கனவுகள்: 37 நாட்களில் 13 தற்கொலைகள்!

மோடி அரசின் பிடிவாதத்திற்கு இன்னும் எத்தனை உயிர்கள்?

புதுதில்லி, ஜூன் 20 - 2026 நீட்-யுஜி தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டு, அதன் மறுதேர்வு ஜூன் 21 (இன்று) நடத்தப்படும் நிலையில், இடைப்பட்ட 37 நாட்களுக்குள் நாடு முழுவதும் குறைந்தது 13 மருத்துவக் கனவு மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட பேரவலம் நிகழ்ந்துள்ளது. இவை வெறும் தனிநபர் சோகங்கள் அல்ல; நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் தவறான கல்விக் கொள்கை மற்றும் அதன் தேசிய தேர்வு முகமையின் (என்.டி.ஏ.) நிறுவன ரீதியான தோல்வியால் நடத்தப்பட்ட படுகொலைகள் ஆகும். ஏழை, எளிய, கிராமப்புற மாணவர் களின் உயிர்களைப் பறிக்கும் ஒரு வர்க்கப் பாகுபாடான தேர்வு முறையை மோடி அரசு பிடிவாதமாகத் திணித்து வருவதன் நேரடி விளைவே இந்த இரத்தக் கறைகள்.

கசிந்த வினாத்தாளும் சிதைந்த நம்பகத்தன்மையும்

கடந்த மே 3 அன்று நாடு முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் உள்ள 5,400-க்கும் மேற்பட்ட மையங்களில் 22.79 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எழுதி னர். தேர்வு முடிந்த சில மணி நேரங்களி லேயே, ராஜஸ்தானின் சிக்கார் பகுதியில் வினாத்தாள் கசிந்தது அம்பலமானது. வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக் களில் உலா வந்த 150 பக்கங்கள் கொண்ட மாதிரித் தாளின் 140 கேள்விகள், உண்மை யான நீட் வினாத்தாளுடன் அப்படியே பொருந்திப் போயிருந்தன. ராஜஸ்தான் காவல்துறையின் சிறப்புச் செயல்பாட்டுக் குழு (SOG) நடத்திய விசார ணையில், மகாராஷ்டிராவின் லத்தூர் கோச்சிங் மையங்கள் மற்றும் புனே பேராசி ரியர்களுக்கு இதில் நேரடித் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது. மே 12 அன்று தேர்வு அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப் பட்டு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. அதிர்ச்சியூட்டும் விதமாக, கைது செய்யப் பட்டவர்களில், நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை (NTA) அமைப்பின் உள்ளாட்களும், வினாத்தாள் தயாரிப்புக் குழுவைச் சேர்ந்த “பாட நிபுணர்களும்” அடங்குவர். அதாவது, தேர்வு முறைகேடு என்பது வெளியிலிருந்து நடக்கவில்லை; மோடி அரசு உருவாக்கிய அமைப்பின் உள்ளிருந்தே அரங்கேறியுள்ளது. இது ஒரு தனித்த சம்பவமல்ல. 2024 நீட் முறைகேடுகளுக்குப் பிறகும் மோடி அரசு எந்தப் பாடமும் கற்கவில்லை. இந்திய மாணவர் சங்கம் சுட்டிக்காட்டி யுள்ளபடி, என்.டி.ஏ. தொடங்கப்பட்டதிலி ருந்து இதுவரை 48 மறுதேர்வுகளையும், 89 வினாத்தாள் கசிவுகளையும் சந்தித்துள் ளது. சுமார் 66 முக்கியத் தேர்வுகளை நடத்திய இந்த முகமை, 12-க்கும் மேற்பட்ட தேர்வுகளில் முறைகேடுகளைச் செய்து 75 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களின் எதிர்காலத்தைச் சீரழித்துள்ளது.

பீதியின் நாடகமும் நிர்வாகக் குளறுபடிகளும்

ஜூன் 21 மறுதேர்வுக்காக மோடி அரசு மேற்கொண்டுள்ள “பாதுகாப்பு” நட வடிக்கைகள், நிர்வாகத்தின் மீதான நம்பிக்கையின்மையையே காட்டுகின்றன. வினாத்தாள்கள் தில்லியிலிருந்து விமா னம் மூலம் மதுரைக்குக் கொண்டு வரப் பட்டு, அங்கிருந்து வான்படை அதிகாரி களின் பாதுகாப்பில் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் திருநெல்வேலிக்குக் கொண்டு செல்லப்பட்டன. அமைதியான கல்விச் சூழ லில் ராணுவ ஹெலிகாப்டர்களைப் பறக்க விட்டு, பயோமெட்ரிக் சோதனைகள் மற்றும் சிசிடிவி கண்காணிப்புகள் என்ற பெயரில் மாணவர்களிடையே ஒரு போர்க் காலப் பீதியை என்டிஏ உருவாக்கியுள்ளது. இவ்வளவு கெடுபிடிகளுக்கு மத்தியி லும் நிர்வாகக் குளறுபடிகள் ஓயவில்லை. நாக்பூரைச் சேர்ந்த மாணவர் ஒருவருக்கு அபுதாபியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்ட அவலமும், பிரயாக்ராஜில் கடைசி நேரத்தில் தேர்வு மையங்கள் மாற்றப்பட்ட தும் அரங்கேறின. (விபரம்: பக்கம் 2) நாட்டின் ஒட்டுமொத்த தேர்வு முறையை யும் ஏலப் பொருளாக மாற்றி, மாணவர் களின் மற்றும் பெற்றோர்களின் பொறுமை யை மோடி அரசு சோதித்து வருகிறது.

37 நாட்கள்: 13 உயிர்களைப் பறித்த கொடூரம்

தேர்வு ரத்து செய்யப்பட்ட மே 12 முதல் ஜூன் 21 மறுதேர்வு வரையிலான 37 நாட்க ளுக்குள், மோடி அரசின் அலட்சியத்தால் 13-க்கும் மேற்பட்ட இளம் உயிர்கள் பலி யாகியுள்ளனர். ராஜஸ்தான், உத்தரப் பிர தேசம், தில்லி, குஜராத், மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு எனப் பல மாநிலங்களில் இந்தத் தற்கொலைகள் நீண்டுள்ளன. • உத்தரப்பிரதேசத்தின் ரிதிக் மிஸ்ரா (21) என்ற மாணவர் மூன்றாவது முறை யாகத் தேர்வு எழுதியவர். அவரது தந்தை அனோக் மிஸ்ரா, “இது அலட்சி யத்தாலும் தோல்வியாலும் மோடி அரசு நடத்திய நிறுவன ரீதியான கொலை” என்று வேதனையோடு குறிப்பிட் டுள்ளார். • நாக்பூரின் அகாங்க்ஷா சதுர்வேதி (20) தனது மருத்துவப் புத்தகத்தில், “மீண்டும் தேர்வு எழுதினால் இதே மதிப்பெண் கிடைக்கும் என்ற உத்தர வாதம் இல்லை” என எழுதிவைத்து விட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். • தமிழ்நாட்டின் கோவைப்புதூரைச் சேர்ந்த அனுகீர்த்தனா (19), மீண்டும் தேர்வை எதிர்கொள்ளும் மன அழுத்தத்தின் காரணமாக ஜூன் 17 அன்று தற்கொலை செய்துகொண்டார். சேலத்தைச் சேர்ந்த கோபிகா ஜூன் 18 அன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த 2021 முதல் 2026 வரை மட்டும் நீட் தேர்வு தந்த மன உளைச்சலால் நாடு முழுவதும் சுமார் 93 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக ஊட கத் தரவுகள் கூறுகின்றன. ஏழைக் குடும்பங்கள் தங்கள் சொத்துக்களை விற்றும், கடன் வாங்கியும் கோச்சிங் மையங்களுக்குச் செலுத்திய பணமும், மாணவர்களின் உழைப்பும் மோடி அரசின் ஒற்றை ரத்து உத்தரவால் ஒரே இரவில் சாம்பலாக்கப்பட்டதே இந்த மர ணங்களுக்குக் காரணம்.

தமிழ்நாட்டின் தொடர் போராட்டமும் ஏ.கே.ராஜன் அறிக்கை ஆதாரங்களும்

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, நீட் தேர்வு என்பது மரணக் கயிறாகவே நீடிக்கி றது. 2017-இல் இத்தேர்வு கட்டாயமாக்கப் பட்டதிலிருந்து மாநிலத்தில் 26-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பலியாகியுள்ளனர். அரியலூர் குழுமூர் கிராமத்தின் கூலித் தொழிலாளி மகள் எஸ். அனிதா, பன்னி ரண்டாம் வகுப்பில் 1176 மதிப்பெண்கள் பெற்றும், நீட் தேர்வால் மருத்துவ இடம் மறுக்கப்பட்டு தற்கொலை செய்துகொண் டது மோடி அரசின் வர்க்கப் பாகுபாட்டிற்கு முதல் சான்றாகும். தமிழ்நாடு அரசு அமைத்த ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமை யிலான உயர்மட்டக் குழுவின் 165 பக்க அறிக்கை, நீட் தேர்வு எவ்வாறு சமூக அநீதி யை இழைக்கிறது என்பதைப் புள்ளிவிப ரங்களுடன் நிரூபித்தது. நீட் தேர்வுக்கு முந்தைய காலத்தில் அரசுப்பள்ளி மாண வர்களின் மருத்துவச் சேர்க்கை விகிதம் 14.44 சதவிகிதமாக இருந்தது, நீட் வந்த பிறகு வெறும் 1.7 சதவிகிதமாகச் சரிந்தது. மேலும், மருத்துவ இடங்களைப் பெற்றவர்களில் 71.42 சதவிகிதத்தினர் பல முறை பணம் செலவழித்து கோச்சிங் மையங்களில் படித்தவர்கள். இதன் மூலம், நீட் என்பது தகுதிக்கான தேர்வு அல்ல, அது வசதி படைத்தவர்களுக்கான தேர்வு என்பதை ஏ.கே. ராஜன் குழு தெளிவு படுத்தியது.

கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான துரோகமும் கோச்சிங் மாஃபியாவும்

கல்வி என்பது அரசியலமைப்பின் பொதுப் பட்டியலில் உள்ள ஒரு துறையா கும். ஆனால், மாநிலங்களின் உரிமை களைப் பறித்து, ஒற்றையாட்சி முறையில் நீட்டை மோடி அரசு திணித்து வருகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமன தாக நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோ தாவிற்கு, பல ஆண்டுகள் தாமதத்திற்குப் பிறகு 2025 மார்ச் 4 அன்று குடியரசுத் தலைவர் மூலம் மோடி அரசு ஒப்புதலை மறுத்தது. இது மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரு மாநில அரசின் இறையாண்மை யை மிதித்துத் துவைக்கும் செயலாகும்.மோடி அரசின் இந்தப் பிடிவாதத்தின் பின்னணியில் பிரம்மாண் டமான “கோச்சிங் மாஃபியா” வணிகம் ஒளிந்துள்ளது. ராஜஸ்தா னின் கோட்டா மற்றும் சிக்கார், தமிழ்நாட்டின் நாமக்கல் போன்ற பகுதிகளை மையமாகக் கொண்டு இயங்கும் இந்த இணை கல்விச் சந்தையின் மதிப்பு சுமார் 58,000 கோடி ரூபாயாகும். ஏழை மாணவர்களை வெளியேற்றி, இந்த கார்ப்பரேட் கோச்சிங் முதலா ளிகள் கொள்ளையடிப்பதற்கே மோடி அரசு துணைபோகிறது.

வலுக்கும் இடதுசாரி மற்றும் மாணவர் இயக்கங்களின் போராட்டம்

மோடி அரசின் இந்த மாணவர் விரோதப் போக்கிற்கு எதிராக இந்திய மாணவர் சங்கம் (SFI) உள்ளிட்ட இடதுசாரி இயக்கங்கள் நாடு தழுவிய கிளர்ச்சிகளை முன்னெடுத்துள்ளன. என்.டி.ஏ. அமைப்பை “தேசிய சித்திரவதை முகமை” (National Torturing Agency) என வர்ணித்துள்ள இடதுசாரி இயக்கங்கள், ஐந்து லட்சம் கையெழுத்துகளைத் திரட்டி, ஜூன் 19 அன்று தில்லியில் கல்வி அமைச்சகத்தை நோக்கிப் பிரம்மாண்ட முற்றுகைப் போராட்டத்தை நடத்தின. ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும், என்.டி.ஏ. முகமை கலைக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் முழக்க மிட்டனர். தமிழ்நாட்டிலும் இடதுசாரிக் கட்சிகள் மற்றும் சமூகநீதிச் சக்திகள் ஒன்றிணைந்து நீட் ஒழிப்பிற்கான அழுத்தத்தைத் தீவிரப்படுத்தியுள்ளன. நீட் என்பது வெறும் தகுதித் தேர்வு அல்ல; அது ஒடுக்கப் பட்ட, ஏழை, கிராமப்புற மற்றும் தமிழ்வழி மாணவர்களை மருத்து வக் கல்வியில் இருந்து திட்டமிட்டு விலக்கி வைக்கும் ஒரு நவீன வர்க்க வடிகட்டி. 2026-இல் நிகழ்ந்துள்ள வினாத்தாள் கசிவும், தொடரும் மாணவர்களின் மரணங்களும் இந்த ஒட்டுமொத்த தேர்வு முறையின் அழுகிய முகத்தை அம்பலப்படுத்தியுள்ளன. மாணவர்களின் உயிர்களைக் குடிக்கும் இந்த அவலத் திற்கு முற்றுப்புள்ளி வைக்க, உடனடியாகத் தமிழ்நாட்டின் நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும். தோல்வி யடைந்த என்.டி.ஏ. அமைப்பைக் கலைத்துவிட்டு, கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். மருத்துவக் கல்வியை வணிகமயமாக்கும் கோச்சிங் மாஃபியாக்களை ஒழிப்பதே பலியான மாணவர்களின் இரத்தக் கறைக்கு மோடி அரசு செய்ய வேண்டிய கைமாறு ஆகும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.