நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வெளியானது!
27 Apr 2026, 10:21 am
<p>இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான (MBBS, BDS உள்ளிட்டவை) நீட் தேர்விற்கான நுழைவுச்சீட்டை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.</p><p>தேர்வர்கள் http://neet.nta.nic.in என்ற இணைய முகவரியில, தங்களின் விண்ணப்ப எண், பிறந்த தேதி உள்ளிட்ட தங்கள் விவரங்களை உள்ளீடு செய்து, நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.</p><p>வருகின்ற மே 3 ஆம் தேதி நடக்கவிருக்கும் இந்த தேர்வுக்கு தமிழகத்தில் 2 லட்சம் மாணவ மாணவியர் உட்பட நாடு முழுவதும் சுமார் 28 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். </p><p> </p>
