நீட் தேர்வில் 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி! தரவரிசைப் பட்டியலும் வெளியீடு
17 Jul 2026, 9:14 pm

நீட் தேர்வில் 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி! தரவரிசைப் பட்டியலும் வெளியீடு

சென்னை, ஜூலை 17 - மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை படிப்புகளில் சேர உதவும் ‘நீட்-யுஜி 2026’ நுழைவுத் தேர்வு கடந்த மே 3 அன்று நடைபெற்றது. வினாத்தாள் கசிவு காரணமாக, இத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, ஜூன் 21 அன்று மறுதேர்வு நடத்தப்பட்டது. நாடு முழுவதும், 551 நகரங்களில் 5,440 மையங் களிலும், வெளிநாடுகளில் 14 மையங்களிலு மாக 20 லட்சம் பேர், மறுதேர்வில் பங்கேற்றனர்.

ஆங்கிலம் உள்பட 12 மொழிகளில் நடைபெற்ற, நீட் மறுதேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை (NTA) வியாழக் கிழமை வெளியிட்டது. இதில் நாடு தழுவிய அளவில் 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

முதலிடம் பெற்றோர்

720 மதிப்பெண்களுக்கு 716 மதிப்பெண்கள் பெற்று பஞ்சாப்பைச் சேர்ந்த ஆர்யன் குப்தா, ஹரியானாவைச் சேர்ந்த பன்ஷுல் பன்சல் ஆகியோர் அகில இந்திய அளவில் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்ட னர். அதிக மதிப்பெண் பெற்றவர்களில் பெரு ம்பாலானோர் 17 முதல் 19 வயதுக்கு உட்பட்ட வர்கள் என என்டிஏ தெரிவித்துள்ளது.

புள்ளி விவரம்

700 மதிப்பெண்களுக்கு மேல் 19 பேரும், 690-க்கும் அதிகமாக 138 பேரும் (இதில் 93 சதவிகிதம் பேர் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றவர்கள்), 650 மதிப்பெண்களுக்கு மேல் 1,492 பேரும், 600 மதிப்பெண்களுக்கு மேல் 10,160 பேரும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 90,780 பேரும் மதிப்பெண் பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்றவர்களில் 58 சதவிகிதம் பேர் மாணவிகள். மாநில வாரியாகப் பார்க்கையில், உத்தரப் பிரதேசத்தில் அதிக பட்சமாக 1.7 லட்சம் பேரும், லட்சத்தீவில் குறைந்தபட்சமாக 43 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தரவரிசை வெளியீடு

தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் neet.nta.nic.in இணையதளத்தில் தங்கள் மதிப்பெண்களைப் பதிவிறக்கம் செய்ய லாம். அகில இந்திய தரவரிசை, மாநில வாரியான முதலிடம், பிரிவு வாரியான முத லிடம், தகுதிக்கான கட்-ஆப் மதிப்பெண் கள், மொழி வாரியான பங்கேற்பு விவரங்கள் ஆகியவற்றையும் என்டிஏ வெளியிட்டுள்ளது. இதற்கிடையே, எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை 23 மாலை 5 மணி வரை கால அவகா சம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த அவ காசம் எக்காரணம் கொண்டும் நீட்டிக்கப் படாது எனவும் மருத்துவக் கல்வி இயக்கு நரகம் அறிவித்துள்ளது. இதனிடையே, எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு தமிழகத்தில் இதுவரை 41,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப் பித்துள்ளனர்.