நீட் தற்கொலைகள்: உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்
19 Jun 2026, 3:55 pm
<p>நீட் நுழைவுத் தேர்வு காரணமாக கடந்த ஒரு வாரத்தில் தற்கொலை செய்துகொண்ட 11 மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) வலியுறுத்தியுள்ளது.</p><p>வினாத்தாள் கசிவு புகார்கள் காரணமாக மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது. 551 நகரங்களில் 22.7 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இத்தேர்வை எழுதியிருந்தனர். இதை தொடர்ந்து நீட் மறுதேர்வு வரும் ஜூன் 21-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்ட பிறகு மன அழுத்தம் காரணமாக மாணவர்களின் தற்கொலை அதிகரித்துள்ளதாகவும், கடந்த ஒரு வாரத்தில் 11 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும், கடந்த 48 மணி நேரத்தில் 5 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் பூச்சி ஜனதா கட்சி தெரிவித்துள்ளது. இது குறித்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், தற்கொலை செய்துகொண்ட 11 மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p><br></p>
