முந்தய பக்கம்

நீட் குறுகிய காலப் பயிற்சி தொடக்கம்

3 Apr 2026, 6:05 pm
நீட் குறுகிய காலப்  பயிற்சி தொடக்கம்
<p><strong>நீட் குறுகிய காலப் &nbsp;பயிற்சி தொடக்கம்</strong></p> <p>புதுக்கோட்டை, ஏப். 3- &nbsp;புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 2025 - 2026 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு தேர்வெழுதி வரும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளிக் கல்வித் துறையின் குறுகிய கால நீட் இலவசப் பயிற்சி வியாழக்கிழமை தொடங்கியது. &nbsp;குறுகிய கால நீட் இலவசப் பயிற்சி வகுப்புக்கு, தமிழ் வழியில் 388 மாணவர்களும், ஆங்கில வழியில் 75 மாணவர்களும், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 5 மாணவர்களும் என மொத்தம் 468 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்காக மாவட்டத்தில் 3 மையங்கள் அமைக்கப்பட்டு, வியாழக்கிழமை தொடங்கி, ஏப். 30 ஆம் தேதி வரை பயிற்சி அளிக்கப்படுகிறது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் இதற்கான தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கூ. சண்முகம் தலைமை வகித்து, பயிற்சியைத் தொடங்கி வைத்தார். &nbsp;இந்தப் பயிற்சி திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 9.15 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நீட் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் சாலை செந்தில் செய்திருந்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram