தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நீட் முறைகேடு, தில்லி மாணவர்கள் மீதான தாக்குதல் புதுச்சேரியில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற மாணவர்கள் கைது!

23 Jul 2026, 9:34 pm
நீட் முறைகேடு,   தில்லி மாணவர்கள் மீதான தாக்குதல் புதுச்சேரியில் ஆளுநர் மாளிகையை  முற்றுகையிட முயன்ற மாணவர்கள் கைது!
<p><strong>நீட் முறைகேடு, தில்லி மாணவர்கள் மீதான தாக்குதல் புதுச்சேரியில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற மாணவர்கள் கைது!</strong></p><p>புதுச்சேரி, ஜூலை 23- நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று ஒன்றியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும். நீட் தேர்வு மன உளைச்சலால் தற்கொலை செய்துகொண்ட மாணவர் களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி தில்லி ஜந்தர் மந்தரில் போராடிய மாணவர்கள் மற்றும் சமூகச் செயல்பாட் டாளர்கள் மீது நடத்தப் பட்டக் கொடூரமான தாக்கு தலைக் கண்டித்துப் புதுச் சேரியில் போராட்டம் வெடித்தது. தடுப்பு வேலிகளைத் தாண்டி போராட்டம் இந்திய மாணவர் சங்கம் சார்பில், புதுச்சேரி அதிதி ஹோட்டல் எதிரில் இருந்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிடுவதற்காக மாணவர்கள் திரண்டு பேரணியாகப் புறப்பட்டனர். மிஷின் வீதி சந்திப்பில் காவல்துறையினர் வலு வான தடுப்பு வேலிகளை அமைத்துப் பேரணியை இடைமறித்துத் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆவேச மடைந்த மாணவர்கள், சாலையில் தரையில் அமர்ந்து ஒன்றிய பாஜக அரசுக்கும் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கும் எதிராகக் கண்டனப் பதா கைகளை ஏந்தி ஆவேசமாக முழக்கமிட்டனர். மாணவர்கள் கைது! சாலையில் அமர்ந்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைக் காவல்துறையினர் வலுக் கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்தனர். இந்தப் போராட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் புதுச்சேரி மாநிலத் தலைவர் ஸ்டீபன் ராஜ், செயலாளர் பிரவீன் குமார், முன்னாள் தலைவர்கள் ஆனந்த், சஞ்சய் சேகரன் உள்ளிட்ட திரளான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இச்சம்பவத்தால் மிஷின் வீதி சந்திப்புப் பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு நில வியது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.