தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நீட் முறைகேடு, கல்வித்துறைச் சீரழிவுக்கு பொறுப்பேற்க மறுக்கும் மோடி அரசுக்கு கண்டனம் சோனம் வாங்சுக்கிற்கு

19 Jul 2026, 9:11 pm
நீட் முறைகேடு, கல்வித்துறைச் சீரழிவுக்கு பொறுப்பேற்க மறுக்கும் மோடி அரசுக்கு கண்டனம் சோனம் வாங்சுக்கிற்கு

நீட் முறைகேடு, கல்வித்துறைச் சீரழிவுக்கு பொறுப்பேற்க மறுக்கும் மோடி அரசுக்கு கண்டனம் சோனம் வாங்சுக்கிற்கு ஆதரவாக நாடு தழுவிய போராட்டங்கள் தீவிரம்

தமிழகத்திலும் இன்று ஆவேசப் போராட்டம்

புதுதில்லி/ சென்னை, ஜூலை 19- தேசிய தேர்வு முகமையின் (NTA) நிர்வாகத் தோல்விகள், நீட், கியூட், யூ.ஜி.சி-நெட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் தொடரும் வினாத்தாள் கசிவுகள் மற்றும் கல்வித்துறையின் வணிகமய மாக்கலுக்கு எதிராக, சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தலை மையில் நடைபெற்று வரும் போரா ட்டம் உச்சகட்டத்தை எட்டியுள் ளது. ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும், கல்வி அமைப்பின் நம்பகத்தன்மையைப் பாதுகாக்க வேண்டும் என்றும் கோரி, நாடு முழுவதும் உள்ள மாணவர் அமைப்புகள், தொழிற் சங்கங்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்துள்ளன.

மாணவர்கள் உண்ணாவிரதம்; சிபிஎம் ஆதரவு

தில்லி ஜந்தர் மந்தரில் 20 நாட் களுக்கும் மேலாக அமைதியான முறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சோனம் வாங்சுக் மற்றும் மாணவர் களை, ஜூலை 18-ம் தேதி அதிகாலை யில் தில்லி காவல் துறை வன்மு றையைப் பயன்படுத்தித் தடுத்து நிறுத்தியது. போராட்டக்காரர்களின் தொலைத்தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டு, எவ்விதத் தக வலும் வெளியே தெரியாத வண் ணம், சோனம் வாங்சுக் வலுக்கட்டா யமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இந்த அடக்குமுறையைக் கண்டித்து, இந்திய மாணவர் சங்கத்தின் அகில இந்தியத் தலைவர் ஆதர்ஷ் எம். சாஜி மற்றும் தில்லி மாநிலச் செய லாளர் ஐஷி கோஷ் ஆகியோர் கால வரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கி உள்ளனர். “உங்கள் அடக்குமுறை எங்கள் போராட்டத்தை நசுக்காது, மாறாக சோனம் வாங்சுக்கின் உறுதி எங்களை மேலும் வலுப்படுத்தும்” என்று இந்திய மாணவர் சங்க பொதுச்செயலாளர் ஸ்ரீஜன் பட்டாச்சார்யா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செய லாளர் எம்.ஏ. பேபி ஜந்தர் மந்தருக்கு நேரில் சென்று போராட்டக்காரர் களுக்கு ஆதரவு தெரிவித்தார். அங்கு பேசிய அவர், நீட் முறை கேட்டிற்குப் பொறுப்புக்கூறல் மற்றும் மத்திய அமைச்சரின் ராஜி னாமா ஆகிய கோரிக்கைகளுக்கு கட்சியின் முழுமையான ஆதரவை உறுதிப்படுத்தினார். இதனிடையே, காக்கரோச் ஜனதா கட்சித் தலைவர்அபிஜீத் திப்கே மற்றும் பிற மாணவர் களும் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

ராஞ்சியில் சிஐடியு மாபெரும் கண்டனப் பேரணி ​

முன்னதாக, ராஞ்சியில் ஜூலை 17 முதல் 19 வரை நடைபெற்ற சிஐடியு மத்திய செயற்குழு கூட்டம், சோனம் வாங்சுக்கின் கைதுக்குக் கடும் கண்ட னம் தெரிவித்தது. கல்வி அமைப்பின் நம்ப கத்தன்மையைக் காக்க வேண்டியதன் அவ சியத்தை வலியுறுத்தி, ராஞ்சியின் வீதி களில் சிஐடியு ஆயிரக்கணக்கான தொழி லாளர்கள் மற்றும் மாணவர்களைத் திரட்டி மாபெரும் கண்டனப் பேரணியை நடத்தி யது. இப்போராட்டத்தின் மூலம், தர்மேந் திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை நாடு தழுவிய முழக்கமாக சிஐடியு மாற்றியுள்ளது. “நிர்வாக அலட்சி யம் மற்றும் பெருநிறுவனங்களின் பேராசை ஆகியவற்றின் பலிபீடத்தில் கோடிக்கணக் கான மாணவர்களின் எதிர்காலம் தியாகம் செய்யப்படக் கூடாது,” என்று முழக்க மிட்ட தொழிலாளர்கள், கல்வியை வணிக மயமாக்கும் தேசிய கல்விக் கொள்கை க்கு எதிராகத் திரண்டு நின்றனர். கல்வி அமைச்சரின் ராஜினாமாவை வலியுறுத்தி ஜூலை 20 அன்று மாபெரும் போராட்டங் களை நடத்த சி.ஐ.டி.யு அழைப்பு விடுத்து ள்ளது. நீட் முறைகேடு மற்றும் கல்வித்து றை ஊழல்களை எதிர்த்து, இந்தியா முழுவதும் உள்ள அனைத்துக் கிளைச் சங்கங்களும் களமிறங்க வேண்டுமென சிஐடியு பொதுச்செயலாளர் எளமரம் கரீம் அழைப்பு விடுத்துள்ளார்.

அரசுக்கு அறிவுஜீவிகள் கடிதம்

தனிடையே, சோனம் வாங்சுக்கின் கைது குறித்துப் பிரதமர் நரேந்திர மோடி க்கு, 25-க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் மற்றும் முன்னாள் அதிகாரிகள் கடிதம் எழு தியுள்ளனர். அதில், “சோனம் வாங்சுக் மற்றும் மாணவர்களின் இந்த அறப்போராட் டம் ஒரு மாத காலமாக வன்முறை யற்ற முறையில் நடைபெற்று வருகிறது. 20 நாட்களுக்கும் மேலாக உண்ணாவிர தத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் கோரிக்கை கள் மிகவும் நியாயமானவை. கல்வித் துறை ஊழல்களுக்குப் பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும். போராட்டக் காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்து வதற்குப் பதிலாக, ஜூலை 18 அன்று அதிகாலையில் காவல் துறையை ஏவி, சோனம் வாங்சுக்கை வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளது ஜனநாயகத்திற்கு எதிரானது. அவருடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள பி.எச்.டி மாணவர்கள் நேகா போரா, ஆமீன் மற்றும் மனிஷ் குமார் ஆகியோரின் உடல் நிலை குறித்தும் அரசு எவ்வித அக்கறை யும் காட்டவில்லை. அவர்களின் உயி ரைக் காக்க வேண்டியது அரசின் கடமை யாகும்” என்று கடுமையாகச் சாடியுள்ளனர். ​இந்தக் கடிதத்தில் பேரா.பிரபாத் பட்நாயக், நஜீப் ஜங், ஜோயா ஹசன், மது பாதுரி, ஹர்ஷ் மந்தர், நீரா சந்தோக், ராஜீவ் பார்கவா, ஜான் தயாள், மீனா குப்தா, கௌதம் முகோபாத்யாயா, அசோக் சர்மா, கீதா ஹரிஹரன், பிரபீர் புர்காயஸ்தா, சுரேந்திர நாத், பிரகிருதி ஸ்ரீவாஸ்தவா, கோபாலன் பாலகோபால், தீபக் சனான், சுரேஷ் கோயல், அனுப் முகர்ஜி, கே.பி. ஃபேபியன், அசோக் குமார் சர்மா, கிருஷ்ணன் ரகுநாத், எஃப். கொலாசோ, ஆஷிஷ் ஜோஷி மற்றும் தேப் முகர்ஜி ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

இன்று தமிழகம் முழுதும் போராட்டம்

இந்தப் பின்னணியில் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறு த்தியும், நீட், கியூட், சிபிஎஸ்இ தேர்வுக் குளறுபடிகளை நீக்கக்கோரியும் ஜூலை 20 (இன்று) தமிழகம் முழுவதும் எழுச்சிப் போராட்டங்கள் நடைபெறவுள்ளன. சி.ஐ.டி.யு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம், உணவுப் புறக்கணிப்பு உள்ளிட்ட போராட்டங்களை ஒருங்கிணைத்துள்ளன. தமிழக உழைப்பாளி மக்களும், மாணவர்களும் பெருந்திரளாகக் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராகக் கண்டனக் குரல் எழுப்ப வேண்டும் என்று அமைப்பு களின் தலைவர்கள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.