நீட் முறைகேடு: அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
21 Jul 2026, 11:48 pm

நீட் முறைகேடு: அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நீட் முறைகேடுகள் மற்றும் கல்வித்துறை சீரழிவைக் கண்டித்தும், தில்லியில் போராடும் சோனம் வாங்சுக் ஆதரவு தெரிவித்தும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் ம. எழில் இளம் வழுதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய அரசின் கல்வித்துறை நடவடிக்கைகளுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்ட இந்நிகழ்வில், மாவட்டச் செயலாளர் வே. பர்சில வான சாஸ்திரி, மாவட்ட மகளிர் துணைக்குழு அமைப்பாளர் ஜெ. மகேஸ்வரி, மாவட்ட இணை செயலாளர்கள் தே. அருள் ஜோதி மற்றும் இரா. பூபதி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.