நீட் ஊழலை விவாதிக்க மறுக்கும் மோடி அரசு நாடாளுமன்றம் முடங்கியது
21 Jul 2026, 9:17 pm

நீட் ஊழலை விவாதிக்க மறுக்கும் மோடி அரசு நாடாளுமன்றம் முடங்கியது

புதுதில்லி, ஜூலை 21 - நீட், அயோத்தி விவகாரங்களை விவாதிக்க மறுப்பதுடன், ஜந்தர் மந்தரில் கூடிய பல்லாயிரக்கணக்கான மாண வர்கள் - இளைஞர்கள் மீது ஒன்றிய பாஜக அரசு, போலீஸ் மற்றும் துணை ராணுவப்படையினரை ஏவி, திங்களன்று கொடூரமான தாக்குதலை கட்டவிழ்த்து விட்டது. இதில், நூற்றுக்கணக்கான மாணவர்கள் காயமடைந்த நிலையில், தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத்தொடரின் 2-ஆவது நாள் கூட்டம், செவ்வாயன்று துவங்கிய நிலையில், இப்பிரச்சனைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீட் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று தர்மேந்திரன் பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதனால் ஏற்பட்ட அமளி காரணமாக 2-ஆவது நாளாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின. முதலில் 12 மணி வரையும், பின்னர் 2 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்ற அவைகள், பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவை, ராகுல் காந்தி தலைமை யில் தனியாகச் சந்தித்த எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், மாணவர்கள் போராட்டம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.