தீக்கதிர் விரைவு செய்திகள்
20 Jun 2026, 11:50 pm

இன்று ‘நீட்’ மறு தேர்வு!

சென்னை, ஜூன் 20 - ‘நீட்’ மறுதேர்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) நாடு முழுவதும் நடைபெறுகிறது. 2026-27 கல்வியாண்டிற்கான ‘நீட்’ தேர்வு, கடந்த மே 3 அன்று நடைபெற்றது. சுமார் 22 லட்சத்து 79 ஆயிரம் மாண வர்கள் தேர்வை எழுதியிருந்த நிலையில், வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் காரணமாக, அத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இது மாணவர்கள் - பெற்றோரை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்நிலையில், ஞாயிறன்று மறுதேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான பணியில் 2.5 லட்சம் பணியாளர்கள் மற்றும் 15 ஆயிரம் துணை ராணு வத்தினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்வு பிற்பகல் 2 மணி முதல் 5.15 மணி வரை நடைபெறும்.

12 மாநகராட்சி தூய்மைப் பணிகள் தனியார்மயம்

சென்னை, ஜூன் 20- தமிழகத்தில் உள்ள 12 முக்கிய மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகளை பொது - தனியார் கூட்டு முறையில் மேற்கொள்வதற்கு தமிழ்நாடு அரசு புதிய திட்டம் வகுத்துள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து விரிவான சாத்தியக்கூறு அறிக்கைக்கான ஆலோசகர்களைத் தேர்வு செய்வதற்கு அரசு தற்போது டெண்டர் வெளியிட்டுள்ளது. தாம்பரம், ஆவடி, ஓசூர், வேலூர், கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், மதுரை, திருச்சி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய 12 மாநகராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

லெபனான் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல்: அமெரிக்கா உடனான அமைதிப் பேச்சை ஈரான் ஒத்திவைத்தது!

டெஹ்ரான், ஜூன் 20 - போர் நிறுத்தத்தை நீட்டிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத் தில் அமெரிக்காவும் ஈரானும் அண்மையில் கையெழுத் திட்டன. அந்த ஒப்பந்தத்தில், லெபனான் உள்ளிட்ட பகுதி களில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களும் நிறுத்தப்பட வேண்டும் என கூறப்பட்டிருந்தது. ஆனால், அதனை மீறி இஸ்ரேல் தொடர்ந்து லெபனான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதையடுத்து, சுவிட்சர்லாந்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட் டுள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாயி தெரிவித்துள்ளார். புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரிவுகள் 1, 4, 5, 10 மற்றும் 11-இல் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள விதிகளை செய லாக்குவது, அதனை துவக்குவது மற்றும் அதனை தொடர்வதை பொறுத்து இறுதி ஒப்பந்த பேச்சுவார்த்தை கள் தொடங்கப்படும். இந்நிலையில் தான், இந்த போர் நிறுத்தத்தை இஸ்ரேல் சீர்குலைக்கத் துவங்கியுள்ளது.