தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நீட் தேர்வுக்கு கூடுதல் நேரம்

12 Jun 2026, 8:29 pm
நீட் தேர்வுக்கு கூடுதல் நேரம்

நீட் தேர்வுக்கு கூடுதல் நேரம்

மருத்துவ இளநிலை படிப்பு களுக்கான நீட் நுழைவுத் தேர்வு மே 3ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வின் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததால் நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, வரும் ஜூன் 21ஆம் தேதி நீட் மறுதேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதில், மாணவர்களுக்கு கூடுதல் வசதிகளை அளிக்கும் நோக்கில் தேசிய தேர்வு முகமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், “தேர்வு கால அளவு 180 நிமிடங்களில் இருந்து 195 நிமிடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, பகல் 2 மணிக்கு தொடங்கும் நீட் தேர்வு 5.15 மணிக்கு நிறைவடையும். தேர்வு தொடங்கும் போதும், முடியும்போதும் வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுவது உள்ளிட்ட நடைமுறைகளும் இதில் அடங்கும்.

நடைமுறைச் செயல்பாடுகளால் நேரம் வீணாகாமல் தேர்வை எழுது வதற்கு ஒதுக்கப்பட்ட முழு நேரத்தை யும் அதற்காக பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்வின்போது, கணக்கீடுகளை போட்டுப் பார்ப்பதற்கும், குறிப்பு களை எழுதுவதற்குமான ரப் ஒர்க் பேப்பர் இரண்டில் இருந்து நான்காக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், இடது கை பழக்கம் கொண்ட தேர்வர்களின் வசதிக்கு ஏற்ப ரப் ஒர்க் பக்கங்களின் அமைப்பும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. முன்பு இந்த பக்கங்கள் வினாத்தாள் புத்த கத்தின் இறுதியில் மட்டுமே வழங்கப் பட்ட நிலையில், இனி அவை வினாக்கள் தொடங்குவதற்கு முன்பு 2 பக்கங்கள், இறுதியில் 2 பக்கங்கள் என இருக்கும். இது வினாத்தாளின் ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழி ஆகிய இரு பதிப்புகளிலும் இருக்கும்” என அதில் கூறப்பட்டுள்ளது.மேலும், இடது கை பழக்கம் கொண்ட தேர்வர்களின் வசதிக்கு ஏற்ப ரப் ஒர்க் பக்கங்களின் அமைப்பும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. முன்பு இந்த பக்கங்கள் வினாத்தாள் புத்த கத்தின் இறுதியில் மட்டுமே வழங்கப் பட்ட நிலையில், இனி அவை வினாக்கள் தொடங்குவதற்கு முன்பு 2 பக்கங்கள், இறுதியில் 2 பக்கங்கள் என இருக்கும். இது வினாத்தாளின் ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழி ஆகிய இரு பதிப்புகளிலும் இருக்கும்” என அதில் கூறப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.