விமானப்படையில் நீட் மறுதேர்வு வினாத்தாள்
8 Jun 2026, 8:39 pm

விமானப்படையில் நீட் மறுதேர்வு வினாத்தாள்

கடந்த மே 3ஆம் தேதி நாடுமுழு வதும் நடத்தப்பட்ட நீட் தேர்வு, வினாத்தாள் கசிவு புகார்கள் காரணமாக மே 12 அன்று ரத்து செய்யப்பட்டது.

இதற்கான மறுதேர்வு ஜூன் 21 அன்று நடைபெற உள்ள நிலை யில், இந்த தேர்வுக்கான வினாத்தாள் விமானப்படை மூலம் கொண்டு செல்லப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஒன்றிய கல்வி அமைச்சகம் இனி நீட் தேர்வு வினாத்தாள் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் தான் தேர்வறைக்குச் செல்லும் என அறிவித்தது.

தொடர்ந்து இதுதொடர்பாக பாதுகாப்பு அமைச்ச கம் வெளியிட்டுள்ள அறிக்கை யில், “இந்திய விமானப் படைக்குச் சொந்தமான விமானங்கள் மூலம் நீட் வினாத்தாள் அடங்கிய பெட்டிகள் நாடு முழுவதும் உள்ள 18 முக்கிய விமானப் படை தளங்களுக்கு நேரடியா கக் கொண்டு செல்லப்படும்.

அங்கி ருந்து, பலத்த பாதுகாப்போடு அந்தந்த மாநிலங்களில் உள்ள தேர்வு மையங்க ளுக்கு அவை விநியோகிக்கப்படும். வழக்கமாக தபால், அஞ்சல் துறை நெட்வொர்க் மூலம் பல கைகள் மாறிச் செல்லும் முறை ரத்து செய்யப்பட் டுள்ளது” என தகவல் வெளியாகி யுள்ளன.