மறுதேர்விலும் வினாத்தாள் கசிவா? பத்திரிகை தகவல் பணியகம் மறுப்பு ; பதற்றத்தில் மாணவர்கள்
yesterday
<p><strong>நீட் மறுதேர்விலும் வினாத்தாள் கசிவா? பத்திரிகை தகவல் பணியகம் மறுப்பு ; பதற்றத்தில் மாணவர்கள்</strong></p><p>புதுதில்லி மே 3 அன்று 2026ஆம் ஆண்டுக்கான நீட் இளங்கலை தேர்வு நடைபெற்றது. ஆனால் வினாத்தாள் கசிவு காரணமாக இந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரத்து செய்யப்பட்ட நீட் மறுதேர்வு ஜூன் 21 அன்று நாடு முழுவதும் பலத்த பாதுகாப்போடு நடைபெற்றது. வினாத்தாள் விமானப்படை மூலமாக கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில், இந்த நீட் மறுதேர்விலும் வினாத்தாள் கசிந்துள்ளதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அதில் டெலிகிராம் செயலியில் நீட் மறு தேர்வு தேர்வு தொடங்குவதற்கு முன்பே வினாத் தாள் இருக்கும் வீடியோ வைரலாகி வரு கிறது. ஆனால் இது போலியான வீடியோ என ஒன்றிய அரசின் பத்திரிகை தகவல் என பணிய கத்தின் (பிஐபி) உண்மைச் சோதனைப் பிரிவு கூறியுள்ளது. இதுதொடர்பாக பிஐபி வெளியிட்டுள்ள அறிக்கையில்,”இந்த வீடியோ முற்றிலும் பொய். சரிபார்க்கப்படாத இத்தகைய தக வல்களைப் பொதுமக்கள் யாரும் பகிர வேண்டாம். தேசிய தேர்வு முகமையும் இந்த வீடியோ கிளிப் முற்றிலும் புனையப்பட்டது என்று கூறியுள்ளது. இந்த மறுதேர்வு விரிவான பாதுகாப்பு மற்றும் தீவிர கண்காணிப்புக்கு மத்தியில்தான் நடத்தப்பட்டது. மாணவர்களை அச்சமடையச் செய்யவோ அல்லது ஏமாற்றவோ இதுபோன்ற தவறான தகவல்களை உரு வாக்குவதும் பரப்புவதும் கடுமையான குற்ற மாகும். இந்த உள்ளடக்கத்தை உருவாக்கிய வர்களைக் கண்டறிய 14 சி (மத்திய இணை யக் குற்றப் பிரிவு) மற்றும் சட்ட அமலாக்க முகமைகளுடன் இணைந்து உரிய நடவ டிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுதொடர் பான தகவல்களுக்கு neet.nta.nic.in உள்ளிட்ட அதிகாரப்பூர்வ நீட், தேசிய தேர்வு முகமை தளங்களை மட்டுமே மாணவர்கள், பெற் றோர்கள், பொதுமக்கள் நம்பியிருக்க வேண்டும்” என அதில் கூறப்பட்டுள்ளது.</p>
