ஜூன் 21-இல் ‘நீட்’ மறுதேர்வு!தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
15 May 2026, 11:21 pm
<p><strong>ஜூன் 21-இல் ‘நீட்’ மறுதேர்வு!தேசிய தேர்வு முகமை அறிவிப்பு</strong></p><p>புதுதில்லி, மே 15 - ‘நீட்’ மறுதேர்வு, ஜூன் 21 அன்று நடைபெறும் என தேசியத் தேர்வு முகமை (NTA) அறி வித்துள்ளது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு ‘நீட்’ (NEET) எனப்படும் தகுதித் தேர்வை ஒன்றிய பாஜக அரசு கட்டாயம் ஆக்கியுள்ளது. இத்தேர்வு, ஏழை - நடுத்தர மாணவர்களுக்கு எதிரானது; பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடுகளுக்கு வழிவகுக்கிறது என்று ஆரம்பம் முதலே குற்றச்சாட்டுக்கள் எழுந்தாலும், ஒன்றிய பாஜக அரசு பிடிவாதமாக நீட் தேர்வை நடத்தி வருகிறது. நடப்பாண்டுக்கான தேர்வு, கடந்த மே 3 அன்று, 5,432 தேர்வு மையங்களில் நடை பெற்ற நிலையில், வழக்கம் போல இந்த முறையும் நீட் தேர்வு முறைகேடு நடைபெற்றிருப்பது அம்பலமானது. மே 3 அன்றைய நீட் தேர்வில் கேட்கப்பட்டிருந்த 120 முதல் 140 கேள்விகள், 15 நாட்களுக்கு முன்னதாகவே வெளியாகி இருந்தது விசார ணையில் உறுதியானது. இது நாடு முழு வதும் நீட் தேர்வை எழுதிய சுமார் 22.80 லட்சம் மாணவ - மாணவியரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. தற்போது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனிடையே, மே 3 அன்று நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்வதாக அறிவித்த தேசியத் தேர்வு முகமை (NTA), விரைவில் மறுதேர்வு நட த்தப்படும் என்று மே 12 அன்று கூறியிருந்தது. அதன்படி ஜூன் 21 அன்று நீட் தேர்வு நடத்தப் படும் என தேசியத் தேர்வு முகமை வெள்ளிக் கிழமை (மே 15) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.</p>
