நீட் மறுதேர்விலும் குளறுபடி ஒரு கேள்வி தவறு; மற்றொரு கேள்விக்கு 2 விடைகள் சரி
3 Jul 2026, 7:27 pm

நீட் மறுதேர்விலும் குளறுபடி ஒரு கேள்வி தவறு; மற்றொரு கேள்விக்கு 2 விடைகள் சரி

மே 3 அன்று நடைபெற்ற நீட் இளங் கலை தேர்வு வினாத்தாள் கசிவு காரண மாக ரத்து செய்யப்பட்டது. இந்த தேர்வின் மறுதேர்வு ஜூன் 21ஆம் தேதி நடைபெற்றது.

இந்த நீட் மறுதேர்வு வினாத்தாளில் இரண்டு முக்கியத் தவறுகள் நடந்துள்ளதை தான் வெளியிட்டுள்ள தற்காலிக விடைக்குறிப்பு (Answer Key) மூலம் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை மறைமுகமாக ஒப்புக்கொண்டுள் ளது. இந்த குளறுபடி இயற்பியல் பாடப்பிரிவில் கேட்கப்பட்ட கேள்விகளிலேயே நடந்துள்ளன.

இதுகுறித்து தில்லியைச் சேர்ந்த பிரபல கல்வி நிபுணர் ஹர்பிரீத் சிங் கொடுத்துள்ள விளக்கத்தின் அடிப்படையில்:

1. தவறான கேள்வி

கேள்வி எண்: 40இல் (தவறான கேள்வி) வெர்னியர் காலிப்பர்ஸ் தொடர்பான வினா விற்கு சரியான விடை 1.6 செ.மீ (1.6 cm) ஆகும். ஆனால், வினாத்தாளில் கொடுக்கப் பட்ட நான்கு ஆப்ஷன்களிலுமே இந்த விடை இடம் பெறவில்லை. கேள்வி தவறாகக் கேட்கப்பட்டதை தேசிய தேர்வு முகமை தற்போது ஏற்றுக்கொண்டுள்ளது.

2. இரண்டு விடைகள் சரியான கேள்வி

கேள்வி எண்: 22இல் மின்காந்த அலைகள் தொடர்பான வினாவிற்கு கொடுக்கப்பட்ட விடை களில் ஆப்ஷன் 3 மற்றும் ஆப்ஷன் 4 ஆகிய இரண்டுமே சரியாக உள்ளன. மதிப்பெண் எவ்வாறு வழங்கப்படும்?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

8 மதிப்பெண்கள்

நீட் இளங்கலை தேர்வுக்கு மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு (இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய 4 பாடங்களுக்கும் தலா 45 கேள்விகள் என மொத்தம் 180 கேள்விகள்) நடைபெற்றது.

தேசிய தேர்வு முகமையின் விதிமுறைப்படி, ஒரு கேள்வி தவறாக இருந்தாலோ அல்லது நீக்கப்பட்டாலோ, அந்தத் தேர்வில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும், அவர்கள் அந்த கேள்வியை எதிர்கொண்டாலும் இல்லா விட்டாலும் 4 மதிப்பெண்கள் போனஸாக வழங்கப்படும். தற்போது 2 கேள்வி குளறுபடி யாக இருப்பதால் தேர்வர்களுக்கு 8 மதிப்பெண்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால் இது குறித்து ஒன்றிய கல்வி அமைச்ச கமோ அல்லது தேசிய தேர்வு முகமை அமைப்போ இதுவரை அதிகாரப்பூர்வமாக கருத்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.